இயல்பு நிலைக்கு திரும்ப உள்ள "பச்சை மண்டலம்" ! ஊரடங்கு நீட்டிப்பு -முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகிறது..?

By ezhil mozhiFirst Published Apr 13, 2020, 12:06 PM IST
Highlights
நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரிழப்பு மற்றும் பரவல் குறித்த எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் இருப்பதால் முழு வீச்சில் கொரோனாவை கட்டுப்படுத்த இன்னும் இரண்டு மூன்று வார காலம் தேவை என்று பிரதமரும் தெரிவித்துள்ளார்.
 
இயல்பு நிலைக்கு திரும்ப உள்ள "பச்சை மண்டலம்" ! ஊரடங்கு நீட்டிப்பு -முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகிறது..?

நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட 21 நாட்கள் ஊரடங்கு காலம் நாளை முடிவடைய உள்ள நிலையில், மேலும் நீட்டிப்பதற்கான அறிவிப்பை பிரதமர் மோடி இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி வாயிலாக பிரதமர் மோடி சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார். அப்போது, இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்தால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த உதவும் என்று பெரும்பாலான மாநில அரசுகள் தெரிவித்தன. பல்வேறு நிபுணர்களும் மத்திய அரசுக்கு இதே யோசனையைத் தெரிவித்துள்ளனர்.


நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரிழப்பு மற்றும் பரவல் குறித்த எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் இருப்பதால் முழு வீச்சில் கொரோனாவை கட்டுப்படுத்த இன்னும் இரண்டு மூன்று வார காலம் தேவை என்று பிரதமரும் தெரிவித்துள்ளார்.

ஆயினும் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.மக்கள் நடமாட்டத்திற்குரிய திட்டங்களுடன் விவசாயம், தொழில்துறையினர் இயங்குவதற்கான வழிகாட்டல்களையும் மத்திய அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாட் ஸ்பாட்  
 
ஹாட் ஸ்பாட் எனப்படும் தீவிரமாக நோய்ப் பரவும் பகுதிகளைக் கண்காணித்து அப்பகுதிகளில் முழு அடைப்பை அமல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மூன்று வர்ணங்களாக சிவப்பு, மஞ்சள், பச்சை எனப் பிரித்து ஆபத்து மிகுந்த சிவப்பு மண்டலங்களில் மட்டும் ஊரடங்கு கட்டுப்பாட்டை விதிக்கவும் மஞ்சள் மண்டலங்களில் லேசான கட்டுப்பாடும் பச்சை மண்டலங்களில் முழு வீச்சில் இயல்பு நிலை திரும்புவதற்கு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


அடுத்த ஊரடங்கு15 நாட்களுக்கு மட்டுமா அல்லது அதற்கும் மேலாகுமா என்பது இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் தொடர்ந்து அதிகரித்து வரும் பரவலை கருத்தில் கொண்டு  ரெட் zone மாவட்டத்தில் அதிக கட்டுப்பாடு விதித்து இன்று அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
click me!