Healthy Lifestyle For Men's : ஆண்களே நீங்கள் நீண்ட ஆயுள் வாழ விரும்பினால் உங்கள் வாழ்க்கை முறையில் சில விஷயங்களை கண்டிப்பாக பின்பற்றுவது அவசியம். அவை..
பொதுவாகவே, ஆண்கள் தங்களது வாழ்க்கை முறை, ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்களில் ரொம்பவே அலட்சியமாக இருப்பார்கள். இரவும் பகலும் கடுமையாக உழைத்தாலும் நேரத்திற்கு சாப்பிடுவதில்லை, தண்ணீர் குடிப்பதில்லை, இரவு தாமதமாக தூங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இரவு வேலை முடிந்து வந்த பிறகும் மொபைல், லேப்டாப், டிவி போன்றவற்றில் தங்களது நேரத்தை செலவிடுகிறார்கள்.
ஆய்வு ஒன்றில், ஆண்கள் பின்பற்றும் வாழ்க்கை முறை, அலுவலக வேலையால் மனஅழுத்தம், வீடு குடும்பம் போன்றவற்றைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தால் அது அவர்களுக்கு அதிக மன அழுத்தத்தை உண்டாக்கும் என்பதை காட்டுகிறது. இதன் காரணமாக அவர்கள் இளம் வயதிலேயே நோய்வாய்ப்பட வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், பெண்களை விட ஆண்கள் தான் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட இருக்கின்றனர். அதுமட்டுமின்றி, ஆண்கள் பெண்களை விட வீடு மற்றும் அலுவலகத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பதால், அவர்கள் தங்களுக்கு அறியாமல் பல உடல்நலப் பிரச்சினைகளை அழைக்கிறார்கள்.
இதையும் படிங்க: தினமும் 4 பல் பூண்டை இப்படி சாப்பிடுங்க! ஆண்களின் பாலியல் பிரச்சனை முதல்..பல பிரச்சனைகளுக்கு குட் பை சொல்லுங்க
சில ஆண்கள் உடற்பயிற்சி செய்யாமல், மது அருந்துதல், புகைப்பிடித்தல், நொறுக்கி தீனி போன்றவற்றை அதிகமாக எடுத்துக் கொள்கிறார்கள். இன்னும் சில ஆண்களோ காலை உணவு தவிர்க்கிறார்கள். ஆண்களிடம் காணப்படும் இந்த மோசமான பழக்கங்களால் இதய நோய், புற்றுநோய், காசநோய், உடல் பருமன், சர்க்கரை நோய் போன்ற அபாயத்தை அதிகரிக்க செய்யும். அந்த வகையில், ஆண்களே நீங்கள் நீண்ட ஆயுள் வாழ விரும்பினால் உங்கள் வாழ்க்கை முறையில் சில விஷயங்களை கண்டிப்பாக பின்பற்றுவது அவசியம். அவை..
இதையும் படிங்க: ஆண்களே இதை மட்டும் சாப்பிடுங்க.. ஸ்டாமினா அதிகரிக்குமாம்.. அதிக நேரம் உடலுறவு கொள்ள முடியுமாம்..
ஆண்கள் ஆரோக்கியமாக இருக்க பின்பற்ற வேண்டிய 5 பழக்கங்கள்:
1. ஆண்களே நீங்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், தொடர்ந்து ஒரே இடத்தில் உட்காருவதை தவிர்க்கவும். நீங்கள் அலுவலகத்தில் வேலை செய்யும் நபராக இருந்தால், உங்களுக்கு அமிலத்தன்மை, உடல் பருமன்,, மூட்டுகள் மற்றும் கால்களில் வலி ஏற்படலாம். அதுமட்டுமின்றி, இரத்த ஓட்டமும் சரியாக நடக்காது. எனவே, அவ்வப்போது இடைவெளி எடுத்துக் கொள்ளுங்கள். சிறிது நேரம் நின்று கொண்டு வேலை செய்யுங்கள் அல்லது ஐந்து நிமிடம் நடக்கவும். மேலும் நீங்கள் லிப்டுக்கு பதிலாக படிக்கட்டுகளை பயன்படுத்துங்கள்.
2. ஆண்களுக்கு அலுவலகம், வீடு, குடும்பம், குழந்தைகளின் கல்வி, நிதிநிலைமை போன்றவற்றால் மன அழுத்தம் அதிகரிக்கும். நீங்கள் தொடர்ந்து மன அழுத்தத்தால் அழுத்தத்தில் இருந்தால் உடலில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உதாரணமாக, மாரடைப்பு, பக்கவாதம், எடை அதிகரிப்பு, நினைவாற்றல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது போன்றவையாகும். எனவே, இந்த பிரச்சினைகள் வராமல் இருக்க உங்களுக்காக நேரத்தை நீங்கள் ஒதுக்குங்கள். எப்போதும் எது குறித்தும் கவலைப்பட வேண்டாம். மகிழ்ச்சியாகவே இருக்க முயற்சி செய்யுங்கள். மன அழுத்தத்தை குறைக்க தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள், இசை கேளுங்கள் மற்றும் உங்களுக்கு விருப்பமான செயல்களில் ஈடுபடுங்கள்.
3. பெரும்பாலான ஆண்கள் புகை பிடிப்பது, மது அருந்துவது, போதை பொருள் எடுத்துக் கொள்ளுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் இது ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கு விளைவிக்கும். இதனால் நுரையீரல் புற்றுநோய், இதய நோய் போன்றவை ஏற்படும். எனவே, இவற்றிலிருந்து விலகி இருங்கள். அப்போதுதான் நீங்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ முடியும்.
4. நீங்கள் உடல் எடையை குறைக்கவும், நீரேற்றத்துடன் இருக்கவும் விரும்பினால், தண்ணீர் அதிகமாக குடியுங்கள். இது நல்ல மனநிலை மற்றும் உடலில் வெப்பநிலையை பராமரிக்கும். எனவே, நீங்கள் தினமும் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்கவும்.
5. சில ஆண்கள் வெளியில் பார்ப்பதற்கு ஃபிட்டாக இருந்தாலும் அவர்கள் உள் உடல் உறுப்புகள் அந்த அளவிற்கு நன்றாக வேலை செய்யாது. ஒருவேளை உங்களுக்கு சந்தேகம் இருந்தால், நீங்கள் இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால் அளவு மற்றும் இதே பரிசோதனையை செய்து கொள்ளுங்கள். ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை முழு உடல் பரிசோதனையும் செய்து கொள்வது மிகவும் அவசியம். இதன் மூலம் நீங்கள் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.