பள்ளிக்கல்வித்துறை அதிரடி திட்டம்..! பெருத்த வரவேற்பு கொடுக்கும் மக்கள்...!

By ezhil mozhiFirst Published Sep 11, 2019, 11:54 AM IST
Highlights

2019 ஆண்டு ஜனவரி 1 முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. பிளேட், பேக், பேக்கிங் கவர் உள்ளிட்ட  பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

பள்ளிக்கல்வித்துறை அதிரடி திட்டம்..! பெருத்த வரவேற்பு கொடுக்கும் மக்கள்...! 

தமிழக பள்ளிகளில் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை அதிரடி தடை விதித்து உள்ளது பள்ளிகல்வித்துறை.

2019 ஆண்டு ஜனவரி 1 முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. பிளேட், பேக், பேக்கிங் கவர் உள்ளிட்ட  பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் நாளை முதல் அக்டோபர் ஒன்றாம் தேதி வரையிலான நாட்களில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்தும் இதுதொடர்பான விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தவும் பள்ளி கல்வித்துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பள்ளி கல்வி துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்ற பிறகு பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். குறிப்பாக நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி மையங்கள், சீருடையில் மாற்றம், ஆசிரியர்களுக்கும் சீருடை, பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேடு மாணவரின் ஆங்கில திறனை அதிகரிப்பதற்காக வெளிநாட்டிலிருந்து ஆங்கில பேராசிரியர்களை வரவழைப்பது, பாடத்திட்டத்தில் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில் அடுத்த அதிரடி நடவடிக்கையாக பள்ளிகளில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உத்தரவிற்கு பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிளம்பியுள்ளது.

click me!