கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடியுங்கள்..! தமிழக மருத்துவர்களை உற்சாகப்படுத்திய முதல்வர் எடப்பாடி..!

thenmozhi g   | Asianet News
Published : Mar 03, 2020, 12:41 PM IST
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடியுங்கள்..!  தமிழக மருத்துவர்களை உற்சாகப்படுத்திய முதல்வர் எடப்பாடி..!

சுருக்கம்

சீனாவில் ஹுவாங் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை அங்கு மற்றும் 3 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். மேலும் 80 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் கொரோனா தாக்கத்தால் பாதிப்படைந்துள்ளனர்.

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடியுங்கள்..!  தமிழக  மருத்துவர்ககளை உற்சாகப்படுத்திய முதல்வர் எடப்பாடி..! 

உலகம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் பீதியை கிளப்பி உள்ள கொரோனா வைரசுக்கு இதுவரை எந்த ஒரு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை.

சீனாவில் ஹுவாங் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை அங்கு மற்றும் 3 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். மேலும் 80 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் கொரோனா தாக்கத்தால் பாதிப்படைந்துள்ளனர்.

இந்த ஒரு நிலையில் இந்தியாவிலும் இரண்டு பேருக்கு கொரோனா தாக்குதல் இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. அதில் ஒருவர் துபாயிலிருந்து தெலுங்கானா வந்தவருக்கும், மற்றொருவர் இத்தாலி சென்று டெல்லி வந்தவருக்கும் கொரோனா நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து மிகவும் கவனமாக செயல்பட வேண்டிய நேரம் என அனைவரும் ஒருவிதமான பதற்றத்தில் இருக்கின்றனர்.

இந்த ஒரு தருணத்தில் சுகாதாரத் துறை சார்பாக நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா வைரசுக்கு புதிய மருந்தை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் தமிழக மருத்துவர்களிடம் கோரிக்கை வைத்து உள்ளார். 

கொரோனாவிற்கு புதிய மருந்தை கண்டுபிடித்து உலக மக்கள் பயனடைய செய்து தமிழர்களின் பெருமையை உணர்த்த வேண்டும் என தெரிவித்து உள்ளார். ஏற்கனவே கொரோனா நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஆராய்ச்சியில்இறங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒரு நிலையில் தமிழக மருத்துவர்கள் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டுமென முதல்வர் எடப்பாடி தெரிவித்துள்ளது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

கற்றாழை ஜூஸ் குடிங்க.. இந்த 7 நன்மைகள் கிடைக்கும்
கரப்பான் பூச்சியை விரட்டும் எளிய குறிப்புகள்