Rusk Halwa : நாவில் வைத்த உடனே கரையும் ரஸ்க் அல்வா! ஈஸியான 10 நிமிட ரெசிபி

Published : Aug 27, 2025, 03:45 PM IST
Halwa Recipe

சுருக்கம்

இந்த பதிவில் வீட்டிலேயே ராஸ்க் அல்வா எளிதாக செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

அல்வா என்றாலே நம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது திருநெல்வேலி தான். அல்வாவுக்கு பெயர் போனது திருநெல்வேலியில் இருட்டுக்கடை அல்வா, முந்திரி அல்வா, மஸ்கோத் அல்வா, பிரட் அல்வா போன்றவை ரொம்பவே பிரபலமானது. அதுவும் குறிப்பாக திருமண வீடுகளில் கொடுக்கப்படும் பிரெட் அல்வாவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடும் அல்வா ஆகும். அந்த லிஸ்டில் ரஸ்க அல்வாவும் இடம்பெறும். இந்த அல்வா பலரும் விரும்பி சாப்பிடும் படியாக இருக்கும். சரி இப்போது வீட்டிலேயே மிக எளிதாக ரஸ்க அல்வா செய்வது எப்படி என்று இந்த பதிவை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

ரஸ்க்கு - 200 கிராம் 

பால் - 300 மில்லி 

சர்க்கரை - கால் கிலோ 

நெய் - கால் லிட்டர் 

முந்திரி பருப்பு - 50 கிராம் 

ஏலக்காய் தூள் - 1/2 ஸ்பூன் 

உப்பு - 1 பின்ச் 

ஃபுட் கலர் - தேவையான அளவு

செய்முறை

ராஸ்க் அல்வா செய்ய முதலில் ஒரு கனமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதை அடுப்பில் வைத்து அதில் பாலை ஊற்றவும். பால் சூடானதும் அதில் ரஸ்க் துண்டுகளை பொடியாக்கி சேர்க்கவும். இப்போது அடுப்பை குறைந்த தீயில் வைத்து கரண்டியால் கிண்ட வேண்டும். கட்டிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

ரஸ்க் நன்றாக பாலில் கரைந்து வெந்ததும் இப்போது அதில் சர்க்கரையை சேரும். சர்க்கரை கரையும் போது பாத்திரம் அடி பிடிக்காமல் இருக்க கிளறிக் கொண்டே இருக்கவும். ஓரளவிற்கு எல்லாம் நன்றாக வந்ததும் ஒன் பின்ச் அளவிற்கு உப்பு இப்போது சேர்க்கவும். எந்த ஒரு இனிப்பு செய்தாலும் ஒன் பின்ச் உப்பு சேர்த்தால் கூடுதல் சுவை கொடுக்கும். அதன்பிறகு நெய்யை சேர்க்க வேண்டும்.

அல்வா செய்வதற்கு நெய் தான் ரொம்பவே முக்கியம் என்பதால் நெய் தாராளமாக நீங்கள் சேர்க்கலாம் நெய் ஊற்றிய பிறகு நன்கு கிளறி விடுங்கள். நெய்யுடன் ரஸ்க் நன்றாக வெந்து அல்வா பதத்திற்கு வரும்வரை கிளற வேண்டும் இப்போது அதில் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறி விடுங்கள். நெய்யுடன் எல்லாம் ஒன்றாக சேரும் போது கலர் மாறும் அல்வாவின் கலரை கூட்ட வேண்டுமானால் ஃபுட் கலர் இப்போது சேர்க்கவும். பிறகு இடைவிடாமல் கிளறிக் கொண்டு இருந்தால், நெய் மிதக்கும் பாத்திரத்தில் ரஸ்கல்வாகவும் ஒட்டாமல் திரண்டு வரும்.

இதனை அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் மூன்று ஸ்பூன் நெய் ஊற்றி நன்கு சூடானதும் அதில் முந்திரி பருப்பை சேர்த்து நன்கு சிவக்க வறுக்கவும். பிறகு அதை அல்வாவுடன் சேர்த்து ஒரு முறை நன்கு கிளறி விடுங்கள். அவ்வளவுதான் நாவில் வைத்த உடனே கரையும் ரஸ்க் அல்வா ரெடி!!

இந்த ரெசிபியை ஒரு முறை நீங்களும் உங்களது வீட்டில் செய்து பாருங்கள்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

Weight Loss : சியா விதை நீரா? சீரக தண்ணீரா? உடல் எடையை விரைவில் குறைக்க எது பெஸ்ட்?
Bananas For Constipation : மோசமான மலச்சிக்கல் கூட இந்த 1 பொருளை 'வாழைப்பழத்துடன்' சேர்த்து சாப்பிட்டால் தீரும்!!