போலி 2,000  ரூபாயா...!!!! அதற்குள் யார் ? எங்கே ? எப்படி?....அதிர்ச்சியில்  மக்கள் ...!!!!

 
Published : Nov 13, 2016, 04:34 AM ISTUpdated : Sep 19, 2018, 01:31 AM IST
போலி 2,000  ரூபாயா...!!!! அதற்குள்    யார் ? எங்கே ? எப்படி?....அதிர்ச்சியில்  மக்கள் ...!!!!

சுருக்கம்

அதற்கும்  போலி 2,000  ரூபாயா...!!!! யார் ? எங்கே ? எப்படி?....அதிர்ச்சியில்  மக்கள் ...!!!!

கர்நாடக மாநிலத்தில் போலி 2ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில்  தலையெடுக்க  தொடங்கியதாக  செய்திகள் வெளியாகி உள்ளது.

அதாவது, கர்நாடக மாநிலம் சிக்மகளூர் என்ற பகுதியிலுள்ள மார்கெட்டில் போலி 2ஆயிரம் நோட்டை மர்மநபர் யாரோ மாற்றி சென்றிருக்கிறார்.

யார் ?

மார்கெட்டில் காய்கறி வியாபாரம்  செய்து வருபவர் அசோக், இவரிடம் காய்கறி வாங்க வந்த நபர் இந்த போலி ரூபாய் கொடுத்துள்ளார்.

எப்படி ?

அந்த போலி 2ஆயிரம் ரூபாய் நோட்டானது கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்டு முன்பக்கமும், பின்பக்கமும் ஒன்றோடு ஒன்று ஒட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது.

நடந்தது ?

இதனை போலி ரூபாய் என அறிந்த அந்த வியாபாரி,  அந்த நோட்டை வாடிக்கையாளரிடமே திரும்ப கொடுத்துள்ளார்.

விசாரணை  

போலி 2ஆயிரம் ரூபாய் நோட்டுகள் உலவுவது குறித்து அப்பகுதி போலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இதுகுறித்து  தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது  குறிப்பிடத்தக்கது......

புது நோட்டை  வெளியிட்டு , இரண்டு நாட்களே  ஆன நிலையில்,  அதற்குள்   திருட்டு  பயலுங்க....கைவரிசை  காமிக்க  தொடங்கியுள்ளனர் ........

இந்த சம்பவம் , பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது........

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

யூரிக் அமில அளவை குறைக்கும் எளிய வழிகள்
குழந்தைகளை நோயிலிருந்து பாதுகாக்கும் '6' உணவுகளின் லிஸ்ட்