தாங்க முடியாத வெயில்... குளத்தில் தாவி குதிக்கும் இளைஞர்கள் ....

First Published Apr 8, 2017, 11:30 AM IST
Highlights
due to untolerable hot people taking bath in lake


கோடை  காலம்  தொடங்கிய  நாள் முதலே  வெயிலின் தாக்கம்  தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது .  பொதுவாகவே  வேலூர்  என்றால்  வெயிலுக்கு தான் பிரபலம் . அந்த  வகையில்   தமிழகத்தில்  மற்ற மாவட்டத்தை விட , வேலூரில்  வெயிலின்  தாக்கம்  எப்பொழுதும்  அதிகம் தான் .

இதற்கு முன்னதாக  உலக  வானிலை  மையம்  இந்த ஆண்டு  தட்பவெட்ப  நிலையில்  5௦ சதவீத  மாற்றம்  இருக்கும்  என  தெரிவித்தது .  பின்னர்  ஆஸ்திரேலிய  வானிலை  ஆய்வு மையமும்  இதே  போன்ற  கருத்தை  முன் வைத்தது .

 அதற்கு  அடுத்தப் படியாக  இந்திய  வானிலை  ஆய்வு மையமும்,  இந்தியாவில் இந்த  ஆண்டு  கடும்  வெயில் நிலவும் என  தெரிவித்தது . இதன் காரணமாக  மக்கள்  முன்னெச்சரிக்கையாக இருப்பது  நல்லது என  தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கேற்றார் போல்,  நேற்று  வேலூரில் 106 டிகிரி  வெப்பம்  பதிவாகியது. வெயிலின் தாக்கத்தை தாங்க  முடியாமல்  மக்கள்  பெரும் அவதிக்கு  உள்ளாகினார்கள்.மேலும்  மற்ற  மாவட்டங்களிலும்  வெயிலின்  தாக்கம்  தொடர்ந்து  அதிகரித்து  காணப் படுகிறது . 

இந்நிலையில், வெயிலின்  பிடியிலிருந்து  தப்பித்துக்கொள்வதற்காக   இளைஞர்கள்  குளம்  குட்டைகளில்  குளிக்க  தொடங்கியுள்ளனர். குளம்  எங்கு இருக்கிறதோ  என்ற எதிர்பார்ப்புடன்  தேடி சென்று குளியல்  போடுகிறார்கள். இந்த வெயிலிலும்  சில்லென  தன் உடலில்  படும்  தண்ணீரால்  உற்சாகம்  அடைகிறார்கள் இளைஞர்கள் 

 

click me!