கொரோனா பீதி: சேலத்தில் தூள் பறக்கும் 10 ரூபாய் மாஸ்க் விற்பனை... முண்டியடித்து வாங்கிச் செல்லும் மக்கள்...!

By Kanimozhi Pannerselvam  |  First Published Mar 27, 2020, 10:21 AM IST

அதனால் சேலத்தில் உள்ள பல 'கார்மென்ட்ஸ்' நிறுவனங்களில்  துணியால் ஆன மாஸ்க் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 


நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரம் அடைந்து வரும் நிலையில் முகச்சவங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவ தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் முதன்மையான முகக்கவசங்கள் 200 ரூபாய் வரையிலும், 3 அடுக்கு கொண்ட  அடுக்கு கொண்ட முகக்கவசம் 50 ரூபாய் வரையிலும், சாதாரண முகக்கவசங்கள் கூட 30 ரூபாய் வரையிலும் விற்கப்பட்டன. இதனால் சாமானிய மக்கள் முகக்கவசங்களை வாங்கி பயன்படுத்துவது மிகப்பெரிய சவாலாக இருந்தது. 

Tap to resize

Latest Videos

undefined

முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்டவற்றை பலர் பதுக்க முயல்வதாகவும், அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் சம்பதிக்க முயல்வதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதையடுத்து களத்தில் இறங்கிய மத்திய நுகர்வோர் அமைச்சகம் சானிடைசர் மற்றும் முகக்கவசத்திற்கான விலையை நிர்ணயித்து உத்தரவு பிறப்பித்தது. 

 அதன்படி 2 லேயர் முகக்கவசம் அதிகபட்சம் 8 ரூபாய்க்கு, மூன்று லேயர் முகக்கவசம் அதிகபட்சம் 10 ரூபாய்க்கும், மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தும் எண் 95 முகக்கவசம்,கடந்த மாதம் 12ம் தேதிக்கு முன்னர் விற்கபட்ட விலையையே தொடரவும் உத்தரவிடப்பட்டது. இதை மீறி அதிக விலைக்கு விற்பனை செய்யும் மருத்து கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 

 தற்போது மக்கள் ஒரு முறை மட்டுமே உபயோகப்படுத்திவிட்டு தூக்கி ஏறியும் முகக்கவசங்களை அதிகமாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர். அதனால் சேலத்தில் உள்ள பல 'கார்மென்ட்ஸ்' நிறுவனங்களில்  துணியால் ஆன மாஸ்க் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல் சேலம் அரசு மருத்துவமனை, பழைய பஸ் ஸ்டேண்ட், புதிய பஸ் ஸ்டேண்ட், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று 10 ரூபாய் மாஸ்க்கை கூவி,கூவி விற்று வருகின்றனர். 

துணியால் ஆன முகக்கவசங்களை பயன்படுத்திய பின் துவைத்து, வெயிலில் உலர வைத்து மீண்டும் பயன்படுத்த முடியும் என்பதாலும், விலை  மலிவாக இருப்பதாலும் அதனை வாங்கி பயன்படுத்த மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

click me!