கொரோனா வைரஸ் பயமா..? டாக்டர் அஸ்வின் சொல்றதை கேளுங்க..!

By ezhil mozhiFirst Published Jan 30, 2020, 6:30 PM IST
Highlights

கரோனா வைரஸை பொறுத்த வரையில் மற்ற வைரஸை போன்றே இதுவும் ஓர் வைரஸ். இந்த வைரஸால் தாக்கப்படும் போது முதலில் நுரையீரல் பாதிக்கும்.

கொரோனா வைரஸ் பயமா..? டாக்டர் அஸ்வின் சொல்றதை கேளுங்க..! 

உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் தாக்கம் குறித்து டாக்டர் அஸ்வின் மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

அதில் முதலில் கரோனா வைரஸ் பற்றி யாரும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அது ஒரு வைரஸ் மட்டுமே. இந்த வைரஸால் தாக்கப்பட்டால் உடனடியாக இறந்து விடுவார்கள் என்ற எண்ணம் யாரும் வைக்காதீர்கள். அப்படி நடக்காது. இழப்பு என்பது மிக மிக குறைந்த சதவீதத்தில் தான் இருக்கும்.

கரோனா வைரஸை பொறுத்த வரையில் மற்ற வைரஸை போன்றே இதுவும் ஓர் வைரஸ். இந்த வைரஸால் தாக்கப்படும் போது முதலில் நுரையீரல் பாதிக்கும். தொண்டையில் வீக்கம், காய்ச்சல் ரன்னிங் நோஸ் என தென்படும் கரோனா வைரஸ் தாக்கி உடனடியாக இறந்து விடுவார்கள் என்றால், இல்லை. முதலில் மேற்குறிப்பிட்ட அறிகுறிகளுக்கு சாதாரணமாக எப்படி சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியுமோ அப்படி சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். அதிலிருந்து மீள முடியும்.

குறிப்பாக 28 நாட்களுக்கு இந்த வைரஸ் தாக்குதல் இருக்கிறதா என கண்காணிக்கலாம். இறப்பு என்பது மிக மிக குறைவே. யாரை அதிகமாக தாக்கும் என்றால்? வயதானோர், குழந்தைகள், மற்றும் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இல்லாதவர்கள் உள்ளிட்டோருக்கு மிக எளிதில் தாக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து யாரும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. 

தேவையில்லாத கருத்துக்களும் தேவையில்லாத குழப்பங்களும் மக்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ளது. சரி.. இதற்கு நாம் என்ன செய்யவேண்டும்? எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம் என்றால் கரோனா வைரஸுக்கு நேரடியான சிகிச்சை முறை எதுவும் இல்லை. ஆனால் அந்த பாதிப்பில் இருந்து மீள பல வழிகள் உள்ளது. வருமுன் காப்பதே சிறந்தது என்பது போல கரோனா  
வருவதற்கு முன்பாக நாம் எங்கு சென்றாலும் மாஸ்க் அணிந்து செல்வது நல்லது.

மேலும் பொதுக்கூட்டங்கள் இருந்தால், அங்கு செல்ல வேண்டாம் எங்கு சென்றாலும் வீட்டிற்கு வரும் போது கை கால்களை சுத்தமாக கழுவிக் கொண்டு உண்பது நல்லது. குறிப்பாக குழந்தைகளுக்கு நாம் சொல்ல வேண்டியது என்னவென்றால்,வெளியில் எங்கு சென்று  வந்தாலும், பள்ளி சென்று வந்தாலும், விளையாடி முடித்து வீடு திரும்பினாலும் முகம் கை கால்களை நன்கு கழுவிவிட்டு பின்னர் சாப்பிட சொல்லுங்கள்.

அதே போன்று தும்பல் வந்தால் அருகில் இருப்பவர்களையும் பாதிக்காதவாறு நம் கைகளை சற்று அணைத்தவாறு வைத்து தும்பவது நல்லது. இதன் மூலம் காற்றில் வைரஸ் பரவுவது தடுக்கப்படும். நம் மூலம் மற்றவர்களுக்கும் வராமல் தடுக்கப்படும். எனவே யாரும் இது குறித்து கவலைபட வேண்டாம் என தெரிவித்து உள்ளார்.

click me!