மறந்து கூட வெறும் வயிற்றில் இதை சாப்பிடாதீங்க..! மீறினால் நமக்கு தான் பிரச்சனை...!

By ezhil mozhiFirst Published Nov 14, 2019, 1:28 PM IST
Highlights

சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி அதிக அளவு இருந்தாலும் கூட வெறும் வயிற்றில் அதனை சாப்பிட கூடாது. இதனால் அல்சர், வாயு பிரச்சனை, வயிற்றுக் கோளாறு ஏற்படும். ஆனால் காலை உணவு எடுத்துக் கொண்டபின் இதனை சாப்பிடலாம்

மறந்து கூட வெறும் வயிற்றில் இதை சாப்பிடாதீங்க..! மீறினால் நமக்கு தான் பிரச்சனை...! 

காலை நேர உணவை எக்காரணத்தைக் கொண்டும் தவறவிடக் கூடாது என நம் பெற்றோர்கள் நமக்கு சொல்வதை கேட்டிருப்போம். மருத்துவர்களும் அதை தான் சொல்வார்கள்.

எவ்வளவு வேலை இருந்தாலும் காலை சிற்றுண்டியை மட்டும் தவிர்க்கக் கூடாது என சொல்வார்கள். அதே போன்று ஒருசில உணவுப் பொருட்களையும் காலை நேரத்தில் தவிர்ப்பது மிக மிக நல்லது. அந்த வகையில் எந்த உணவுகளை காலை நேரத்தில் மறந்தும் சாப்பிடவே கூடாது என்பதை பார்க்கலாம்.

குறிப்பாக சிட்ரஸ் பழங்கள்; சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி அதிக அளவு இருந்தாலும் கூட வெறும் வயிற்றில் அதனை சாப்பிட கூடாது. இதனால் அல்சர், வாயு பிரச்சனை, வயிற்றுக் கோளாறு ஏற்படும். ஆனால் காலை உணவு எடுத்துக் கொண்டபின் இதனை சாப்பிடலாம்.

அதிக மசாலாக்கள், காரசாரமான எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை காலை நேரத்தில் சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும். எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவு பொருட்களை எடுத்துக் கொண்டால் நெஞ்சு எரிச்சல் வயிறு தொந்தரவு கண்டிப்பாக ஏற்படும். இதற்கு பதிலாக காலை நேரத்தில் ஆப்பம் , தோசை, இட்லி என மிருதுவான சில உணவுப்பொருட்களை எடுத்துக் கொள்வது மிக சிறந்தது.

வாயு நிறைந்த குளிர்பானங்கள் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளுதல் கூடவே கூடாது. குளிர்பானங்கள் மட்டுமின்றி சோடாவாக இருந்தாலும் காலை நேரத்தில் எடுத்துக்கொள்வது கூடாது. அதற்கு பதிலாக பழ ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம்.

தக்காளியில் அதிகமாக டானிக் ஆசிட் இருப்பதால் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்வது கூடாது.

அதேபோன்று காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஸ்வீட்ஸ் மாற்று சர்க்கரை எடுத்துக் கொள்ளகூடாது. இதனால் மயக்கம் வாந்தி பசியின்மை வயிற்று கோளாறு உள்ளிட்ட சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

click me!