டெல்டாக்ரான் உங்களுக்கு வரக்கூடாதா?அப்படினா..தெரியாமல் கூட இத பண்ணாதீங்க...

By manimegalai aFirst Published Jan 10, 2022, 2:28 PM IST
Highlights

டெல்டாக்ரான் மற்றும் ஓமைகிறான் போன்ற புதிய வகை கரோனா பரவலில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஒட்டுமொத்த உலகமும் கரோனா என்னும் கொடிய வைரஸ் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. என்ன தான் இந்த கரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், கரோனா வைரஸ் குறிப்பிட்ட காலத்தில் பின் டெல்டா, டெல்டா பிளஸ், பீட்டா என்று உருமாற்றமடைந்து தாக்கி வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு கரோனாவின் டெல்டா மாறுபாடு இந்தியாவில் இரண்டாம் அலையை ஏற்படுத்தி குறுகிய காலத்தில் பல உயிர்களைப் பறித்தது. அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு கொரோனாவின் ஓமிக்ரான் மாறுபாடு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இந்த சூழலில் மற்றுமொரு புதிய வகை கரோனா வைரஸ் டெல்டாக்ரான்  என்ற பெயரில், சைப்ரஸ் நாட்டின் ஒரு சில பகுதிகளில் தென்படத் தொடங்கி உள்ளது.இதனால் மக்கள் மனதில் மீண்டும் அச்சம் அதிகரிக்கிறது.

நீங்கள் பாதுகாப்பாக இருக்க விரும்பினால் தவிர்க்க வேண்டிய சில தவறான எண்ணங்களையும், செய்யக்கூடாத தவறுகளையும்  பின்பற்றுவது அவசியம்.

கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்தால் அலட்சியமாக இருக்கக்கூடாது:
 
உலக சுகாதார அமைப்பு சமீபத்திய அறிக்கையில், ஓமிக்ரான் மாறுபாடு மிக அதிக ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.  இதற்கு முன்பு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்  ஓமைகிறான் மூலம் எளிதாக மீண்டும் நோய்த்தொற்றுக்கு ஆளாகலாம். இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி 6 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை இருக்கும் என்று கடந்த கால அறிவியல் சான்றுகள் சுட்டிக்காட்டியிருந்தாலும், அது நோய்த்தொற்றுக்குப் பிறகு சுமார் 90 நாட்களுக்கு அதன் உச்சத்தில் இருக்கும் என்றும் அதன் பிறகு குறையத் தொடங்கும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தடுப்பூசி போட்டுவிட்டதால் அலட்சியமாக இருக்க வேண்டாம். நாம் சுவாசிக்கும்போது, பேசும்போது, இருமல் அல்லது தும்மும்போது, நம் முகக்கவசம் அணிவது நோயின் தீவிரத்தை தடுப்பது மட்டுமல்லாமல், பரவுவதையும் தடுக்கலாம். நன்கு பொருத்தப்பட்ட முகக்கவசம் அணிவது நோயைத் தடுப்பதில் ஒரு முக்கியமான படியாக இருக்கும். ஆனால், நாம் அதை லேசாக எடுத்துக் கொண்டு பேருக்கு மூக்கின் கீழே முகக்கவசம் அணிகிறோம். நோய்த்தொற்று விகிதம் அதிகரிக்கும் போது மட்டுமே மக்கள் கரோனா வழிமுறைகளில் தீவிரம் காட்டுகின்றனர். இனி அவ்வாறு இருக்கக்கூடாது. பேரழிவு காலம் இன்னும் முடியவில்லை என்பதைக் மனதில் கொண்டு ஒவ்வொரு நாளும் முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற கரோனா வழிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். 

 கரோனா மீண்டும் அதிகரித்து வரும் சூழலில், விழிப்புடன் இருப்பது மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பது முக்கியம். இருப்பினும், நீங்கள் ஏற்கனவே தடுப்பூசி போட்டிருந்தால், நீங்கள் தொற்றுநோய்களிலிருந்து நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர் அல்லது லேசான அறிகுறிகளை மட்டுமே வரும் என்று நினைத்தால், அது தவறு.  கரோனா தடுப்பூசிகள் மிகவும் உபயோகமானவை என்பதை நிரூபித்திருந்தாலும், கரோனா தடுப்பூசி எடுத்து கொண்டவர்களுக்கும் நோய் பரவும் எனபதை நினைவில் கொள்ள வேண்டும்.

 கரோனா அறிகுறிகளை ஜலதோஷம் என்று நிராகரித்தல் தலைவலி, தொண்டைப் புண், இருமல் அல்லது லேசான காய்ச்சல் போன்றவை பொதுவான சளி அல்லது காய்ச்சல் தொற்று போல் உணரலாம். ஆனால் இந்த அறிகுறிகளை தொடர்ச்சியாக இருந்தால்,​​ அருகில் உள்ள மருத்துவமனையில் சோதனை செய்வது அவசியம். உங்களுக்கு குளிர்கால சளி இருப்பதாக நீங்கள் நம்பினாலும், ஆர்டிபிசிஆர் அல்லது விரைவான ஆன்டிஜென் சோதனையைப் பெறுவது உங்கள் முடிவுகளை உறுதிப்படுத்தும்.  அதன் பிறகு மருத்துவரின் அறிவுரையின் பேரில் உங்களை நீங்கள் வீட்டில் தனிமைப்படுத்தி  கொள்ளலாம்.இத்தகைய மோசமான சூழ்நிலையில் நாம் அதிக விழிப்புடனும், பாதுகாப்புடனும் இருப்பது அவசியம்.

click me!