
நவகிரகங்களை எத்தனை சுற்று சுற்றுவது?
கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள்,கோவிலுக்கு சென்று வழிபடும் போது,அங்குள்ள ஒன்பது கிரகங்களை சுற்றுவது வழக்கம்.நவ கிரகங்களை சுற்றினால்,நமக்கு உள்ள சில தடைகள் நீங்கி வாழ்கையில் முன்னேற ஒரு வழிவகை பிறக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நவகிரகங்களைப் சுற்றி வழிபடும் போது அந்தந்த கிரகத்திற்கும் உரித்தான எண்ணிக்கையில் சுற்றி வழிபட்டால் மேலும் நல்லது
அதாவது முதலில் ஒன்பது முறை சுற்றி வணங்கிய பின் அந்தக் கிரக அனுக்கிரகத்துக்காக மேலும் விசேஷமாகச் சுற்றி வந்து வழிபடுதல் வேண்டும்.
நவ கிரகங்கள்
சூரியன் – 10 சுற்றுகள்
சுக்கிரன் – 6 சுற்றுகள்
சந்திரன் – 11 சுற்றுகள்
சனி – 8 சுற்றுகள்
செவ்வாய் – 9 சுற்றுகள்
ராகு – 4 சுற்றுகள் அடிப்பிரதட்சிணம்
புதன் – 5, 12, 23 சுற்றுகள்
கேது – 9 சுற்றுகள்
வியாழன் – 3, 12, 21 சுற்றுகள்
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.