சூடு பிடுக்கும் வெட்டி வேர் விற்பனை...! நீங்களும் பயிரிடலாம்... அதுவும் குறைந்த செலவில்..!

By ezhil mozhiFirst Published Jan 21, 2019, 1:10 PM IST
Highlights

மருத்துவ பயன் கொண்ட வெட்டிவேர் விற்பனை தற்போது நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.
 

சூடு பிடுக்கும் வெட்டி வேர் விற்பனை...! 

மருத்துவ பயன் கொண்ட வெட்டிவேர் விற்பனை தற்போது நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. அதாவது பொதுவாகவே, விவசாயம் என்றாலே நெல் பயிரிடுவது தான் நினைவுக்கு வரும். இதற்கு அடுத்த படியாக மா,தென்னை மரங்கள், சவுக்கு,முந்திரி,மூங்கில்,செம்மரம் உள்ளிட்டவை சொல்லலாம். இவைகள் வளர குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது ஆகும். 

அதே வேளையில், ஒரு சில பயிர்கள் ஆறு மாதத்திற்குள் அல்லது ஒரு வருடத்திற்குள் அறுவடை செய்ய முடியும். நல்ல லாபத்தையும் பெற முடியும். அந்த வகையில் தாற்போதைக்கு மருத்துவ பயன்பாட்டிற்கு அதிகம் பயன்படும் வெட்டி வேர் பயிரிடும் முறை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

மணற்பாங்கான இடங்களில் வெட்டி வேர் நன்கு வளரக்கூடியது. இதனை பயிரிட்டு சுமார் 12 மாதங்களில் அறுவடை செய்ய முடியும்.இதன் மூலம் நல்ல லாபத்தையும் பெற முடியும். மருத்துவக் குணம் வாய்ந்த வெட்டிவேர் நறுமண எண்ணெய் தயாரிக்கவும், மருந்து தயாரிக்கவும் பயன்படுகிறது.மேலும் இதனை பயிரிட குறைந்த அளவு தண்ணீரே போதுமானது. 

வெட்டி வேர் பயிரிட்டால் மண்  நல்ல வளமாக காணப்படும். மேலும் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் பயிராக வெட்டிவேர் உள்ளதால், இது குறித்த விழிப்புணர்வு மக்களிடை யே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

click me!