சென்னை மேற்குமாம்பலம் டாக்டருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ! முடுக்கிவிடப்பட்ட சுகாதாரத்துறை.!!

By Thiraviaraj RMFirst Published Apr 6, 2020, 10:11 AM IST
Highlights

தமிழகத்தில்  கொரோனா தொற்றுக்கு இதுவரை 5பேர் பலியாகி இருக்கிறார்கள். 570 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் கொரோனா பணியில் ஈடுபட்டிருந்த டாக்டர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
 
T.Balamurukan

சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த மருத்துவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவருடன் தொடர்பில் இருந்த 35 பேரையும் தனிமைப்படுத்தி கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த டாக்டர் சென்னை விமானநிலையத்தில் ,வெளிநாடுகளில் இருந்து சென்னை வந்தவர்களை பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டவர். தற்போதைய சூழ்நிலையில், டாக்டர் மனைவி,குழந்தைகள்,அம்மா என அனைவரையும் தனிமைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. டாக்டர் வீடு மருத்துவமனை இருக்கும் பகுதிகளை சுகாதாரத்துறை தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருக்கிறது. கிருமி நாசி தெளிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றது. கொரோன 3ம் கட்டத்தை எட்டிவிடுமோ என்கிற அச்சம் தற்போது நிலவி வருகிறது.

click me!