பணம் - பொருட்களில் ஒட்டி இருக்கும் கொரோனா கிருமியை அழிக்கும் 'பேட்' கண்டுபிடிப்பு!

By manimegalai aFirst Published Apr 18, 2020, 5:06 PM IST
Highlights

உலக நாடுகளை அச்சுறுத்தி, பல உயிர்களை பலி வாங்கியுள்ள கொரோனா வைரஸ், பணம், மற்றும் பொருட்கள் மூலமாகவும் பரவும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.  இதுபோன்ற பொருட்களின் மூலம் கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் பஞ்சாப்பை சேர்ந்த பல்கலை ஆராச்சியாளர்கள் பேட் வடிவிலான புதிய கருவியை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.
 

உலக நாடுகளை அச்சுறுத்தி, பல உயிர்களை பலி வாங்கியுள்ள கொரோனா வைரஸ், பணம், மற்றும் பொருட்கள் மூலமாகவும் பரவும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.  இதுபோன்ற பொருட்களின் மூலம் கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் பஞ்சாப்பை சேர்ந்த பல்கலை ஆராச்சியாளர்கள் பேட் வடிவிலான புதிய கருவியை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.

இந்த கருவி குறித்து... பஞ்சாபி மாநிலத்தில் உள்ள, 'லவ்லி புரோபஷ்னல் பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர், மந்தீப் சிங் என்பவர் கூறுகையில்...

தங்களுடைய பல்கலைக்கழக ஆராச்சியாளர்கள், தற்போது நிலவி வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு 80 சென்டிமீட்டர், நீளம் கொண்ட, பேட் வடிவிலான புதிய கருவியை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது பார்ப்பதற்கு, வீடுகளில் பலர் கொசு அடிப்பதற்கு பயன்படுத்தப்படும் 'பேட்' போன்ற வடிவத்தில் இருக்கும். இதில் புற  ஊதாக்கதிர்கள் அதிர்வு இருக்கும். இதன் மூலம் கடைகளில் இருந்து பொருட்களை வாங்கி வந்த பின், பொருட்கள், மற்றும் காசு, போன்றவற்றின் மீது 'பேட்' டை மெதுவாக அசைத்தால் கொரோனா வைரஸ் கிருமிகள் முழுமையாக அழிந்துவிடும் என கூறியுள்ளார்.

குறிப்பாக பொருட்களில் இருந்து 45 அங்குல இடைவெளிக்கு மேல், இந்த பேட்டின் புற ஊதாக்கதிர்கள் அடங்கிய பக்கத்தை, 60 நொடிகள், அசைத்தால் போதும் , கிருமிகள் முழுமையாக அழிந்துவிடும்.

அதே நேரத்தில் மற்றொரு பக்கத்தில், புற ஊதாக்கதிர்களில் இருந்து நம்மை பாதுகாக்கும் வகையிலான உலோக தகடுகள் இந்த பேட்டில் பொருத்தப்பட்டுள்ளது.

இது மிகவும் சிறிய அளவில் இருப்பதால், எங்கு வேண்டுமாலனும் எடுத்து செல்லலாம். இதனை பேட்டரி மற்றும் எலக்ட்ரிக் சார்ஜ் மூலம் இயக்கி கொள்ள முடியும்.  இந்த பேட் தயாரிக்கும் பணி வெற்றிகரமாக முடிவடைந்து விட்டாலும், அதிகார பூர்வமான ஒப்புதல் பெற்ற பிறகே விற்பனைக்கு கொண்டுவரப்படும் என்றும், இதன் விலை சுமார் 1000 ரூபாய் வரை இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

click me!