மதுரையில் ஒருவருக்கு கொரோனா வதந்தியால் பரபரப்பு..!!

By Thiraviaraj RMFirst Published Mar 9, 2020, 9:22 PM IST
Highlights

மதுரையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக வலிய வந்து எனக்கு கொரோனா இருக்கானு செக் பண்ணுங்கனு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வந்த ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டது.

T.Balamurukan
மதுரையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக வலிய வந்து எனக்கு கொரோனா இருக்கானு செக் பண்ணுங்கனு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வந்த ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரையில் கலால் மற்றும் சுங்கவரித்துறையில் அதிகாரியாக பணியாற்றி வருபவர் அணில் ராஜ். இவர் கடந்த சில நாட்களாக வேலையின் அகாரணமாக துபாய், நெதர்லாந்து, டெல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் அணில் ராஜ் கடந்த மாதம் 28ம் தேதி துபாயிலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்தடைந்தார். 


 கடந்த பத்து நாட்களுக்கு மேலாக அணில் ராஜுக்கு காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அவரை பரிசோதித்த மதுரை ராஜாஜி அரசு மருத்துவர்கள் கொரோனா அறிகுகள் தென்படுவதாக சந்தேகித்து அவரை சிறப்பு சிகிச்சை பிரிவில் மருத்துவம் அளித்து வருகின்றனர். ஏர்கனவே, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தூத்துக்குடியைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக சந்தேகித்து பரிசோதனைகள் நடத்தப்பட்டது. பின்னர் கொரோனா தொற்று இல்லை என்று உறுதியானதும் அவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 

click me!