கொரோனா எதிரொலி..! தமிழகத்தில் 9 பேர் தீவிர கண்காணிப்பு...!

thenmozhi g   | Asianet News
Published : Mar 12, 2020, 12:27 PM IST
கொரோனா எதிரொலி..!  தமிழகத்தில் 9 பேர் தீவிர கண்காணிப்பு...!

சுருக்கம்

மதுரை கோவை, சென்னை, திருச்சி போன்ற சர்வதேச விமான நிலையங்களில் சோதனை செய்ததில் 1,265 பேர் வீட்டு கண்காணிப்பிலும், 9 பேர் நேரடி கண்காணிப்பில் வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா எதிரொலி..!  தமிழகத்தில் 9 பேர் தீவிர கண்காணிப்பு...!

தமிழகத்தில் மட்டும் இதுவரை கொரோனா வைரஸ் அறிகுறியால் 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது மதுரை கோவை, சென்னை, திருச்சி போன்ற சர்வதேச விமான நிலையங்களில் சோதனை செய்ததில் 1,265 பேர் வீட்டு கண்காணிப்பிலும், 9 பேர் நேரடி கண்காணிப்பில் வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர 75 பேரின் மாதிரிகள் உடனுக்குடன் ஆய்வு செய்ததில் 73 பேருக்கு நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தவிர தற்போது சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஓமனில இருந்து வந்த நபரின் உடல் நிலை சீராக இருக்கிறது என்றும், விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வருவதால், ஒரு பக்கம் மும்முரமான விழிப்புணர்வு, மற்றொரு பக்கம் கொரோனா குறித்த பயமும் இருக்கத்தான் செய்கிறது என்கின்றனர் மக்கள் . 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Alpha Female: யார் இந்த ஆல்ஃபா பெண்கள்? உலகையே ஆளும் பெண்களின் பின்னணியில் இருக்கும் ரகசியம்!
Goa Shopping: கோவா போறீங்களா? சீப்பா ஷாப்பிங் செய்ய சூப்பர் இடங்கள் இதோ..!