
“பூங்கொத்து வேண்டாம்” ...”ஒழுங்கா வேலை பார்க்கலாம்“ – உற்சாகத்துடன் “ புதிய தலைமை செயலாளர்”..!
புதியதாக பதவி ஏற்றுள்ள, தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் , தற்போது உற்சாகமாக தன் வேலையை தொடங்கியுள்ளார்.
இவரை வரவேற்கும் விதமாக, மற்ற உயரதிகாரிகள், மற்றும் பணியாளர்கள் என பல்வேறு தரப்பில் இருந்து, அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக , பூங்கொத்தை கொடுத்தும், பழங்களை கொடுத்தும் வரவேற்பு தருகின்றனர்.
இந்நிலையில், தன்னை பார்க்க வரும் யாரும் , “ இனி பூங்கொத்தையோ அல்லது பழங்களையோ கொண்டு வரவேண்டாம், என்றும், நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து இனி செயல்பட போகிறோம் என தெரிவித்துள்ளார்.
இவருடைய இந்த அன்பு கட்டளை , மற்றவர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளதாம் ........
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.