Bigg boss ultimate eviction: பிக் பாஸ் அல்டிமேட்டில் இந்த வாரம் வெளியேறுவது யார் தெரியுமா? கசிந்த தகவல்..!!

Anija Kannan   | Asianet News
Published : Feb 25, 2022, 01:19 PM ISTUpdated : Feb 25, 2022, 01:24 PM IST
Bigg boss ultimate eviction: பிக் பாஸ் அல்டிமேட்டில் இந்த வாரம் வெளியேறுவது யார் தெரியுமா? கசிந்த தகவல்..!!

சுருக்கம்

Bigg boss ultimate: பிக் பாஸ் அல்டிமேட்டில், இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற பெரிய ரசிகர்களுக்கு இருந்து வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியானது, நெதர்லாந் நாட்டின் 'பிக் பிரதர்' நிகழ்ச்சியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இது இந்தியாவில் முதலில் ஹிந்தியில் அறிமுகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் என்று பல மொழிகளில் நடத்தப்பட்டு மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது. 

தற்போது, தமிழில் மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் நம்பர் 1 தொலைக்காட்சி நிகழ்ச்சியாக பிக்பாஸ் உள்ளது. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாதது வழங்கப்படும் பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.  

இந்நிலையில் 'பிக் பாஸ் அல்டிமேட்' என்கிற புதிய நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தினர். இந்த ரியாலிட்டி ஷோ வழக்கம் போல விஜய் டிவியில் ஒளிபரப்பாவதற்கு பதிலாக டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டது.

இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை கிளப்பியது. அதன்படி முதல் சீசனில் இருந்து சினேகன், ஜூலி, சுஜா வருணியும், இரண்டாவது சீசனில் இருந்து ஷாரிக்கும், தாடி பாலாஜியும், மூன்றாவது சீசனில் இருந்து அபிராமி, வனிதாவும், நான்காவது சீசனில் இருந்து அனிதா, பாலாஜி முருகதாஸ் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தியும், 5-வது சீசனில் இருந்து நிரூப், தாமரைச் செல்வி, சுருதி மற்றும் அபிநய் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
 
இந்த நிலையில், நிகழ்ச்சியில் இருந்து சுரேஷ் சக்ரவர்த்தி, சுஜா வருணி, ஷாரிக், அபிநய் மற்றும் வனிதா ஆகியோர் தானாகவே முடிவு எடுத்து வெளியேறிவிட்டார்.

அத்திமட்டுமின்றி, இந்த வாரம் முதல் கமல்ஹாசனுக்கு பதிலாக சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார்.அவரின் இந்த முடிவுக்கு காரணம் பணிச்சுமை தான். இடைவிடாத படப்பிடிப்பு மற்றும் அரசியல் பணிகள் என தொடர்ந்து பிசியாக இயங்கி வருவதால், பிக்பாஸில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக கமல் (Kamal) அறிவித்தார். 

இந்நிலையில், தற்போது இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற பெரிய ரசிகர்களுக்கு இருந்து வருகிறது. தற்போது வெளிவந்த அன் அஃபிஷியல் வாக்குகளின் அடிப்படையில், தாடி பாலாஜி, சினேகன், ஸ்ருதி ஆகிய மூவருக்கும் ஒரே அளவிலான வாக்கு எண்ணிக்கைகள் வித்தியாசம் உள்ளது . 

எனவே, இவர்கள் 3 பேரில் யாராவது ஒருவர் வெளியேறுவது நிச்சயம்  என்கின்றனர்.இருப்பினும், முடிவு என்ன என்பதை பொருந்திருந்து பார்ப்போம்.


மேலும் படிக்க...Rakul Preet Singh hot: பச்சை நிற உடையில் கையை தூக்கி...பால் வண்ண பதுமை போல் இருக்கும் ரகுல் பிரீத் சிங்...

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

வீட்டில் துளசி செடி வைத்தால் கிடைக்கும் நன்மைகள்
குழந்தையின் ஞாபகசக்தியை அதிகரிக்கும் '7' அற்புத உணவுகள்