தினமும் துளசி சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? அடடே! இவ்வளவு நாள் இது தெரியுமா போச்சே?

By manimegalai aFirst Published Jan 6, 2022, 1:23 PM IST
Highlights

துளசி சாப்பிட்டால் கிடைக்கும் 12 சிறந்த நன்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

துளசி, ஏராளமான ஆயுர்வேத மற்றும் இயற்கை மருந்துகளின் பயன்பாட்டில் முக்கியத்துவம் வாய்ந்தது.  மூலிகைகளின் ராணி என்று அழைக்கப்படும் துளசியில் இலைகள் மட்டுமின்றி, அதன் வேர் மற்றும் பூவிலும் கூட பல நோய்களை எதிர்த்துப் போராடும் பண்புகள் உள்ளன. துளசியில் அதிகப்படியாக காணப்படுவது லேசான பச்சை நிற இலைகள் கொண்ட வன துளசி ஆகும். இது தவிர பச்சை இலைகளை கொண்ட துளசி, ஊதா இலைகள் கொண்ட துளசி மற்றும் கருந்துளசி ஆகியவை துளசியின் வகைகளாகும். துளசி செடிக்கு அருகே சென்று அதன் வாசனையை நுகர்வது கூட நம்மை பல நோய்களில் இருந்து பாதுகாக்க முடியும் என்று நம்பப்படுகிறது. அதன் ஆன்மீக நம்பிக்கையின் காரணமாக, இது புனித துளசி என்று இன்றும் அன்புடன் அழைக்கப்படுகிறது.

துளசி சாப்பிட்டால் கிடைக்கும் 12 சிறந்த நன்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மன அழுத்தத்தைக் குறைக்கிறது: 

இன்றைய நவீன வாழ்க்கையில் மன அழுத்தம் மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. நீங்கள் தினசரி 12 துளசி இலைகளை சாப்பிட்டு வந்தால், மன அழுத்தத்தை குறைப்பது மட்டுமின்றி, இரத்த ஓட்டத்தை சீராக்குவதன் மூலம் நரம்பு மண்டலத்திற்கு ஒரு இதமான உணர்வை தருகிறது.

செரிமான பொருள்: துளசியை உண்பதால் செரிமானத் திறன் மேம்படுகின்றது மற்றும் நரம்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. உடலில் சுரக்கும் அமிலத்தின் அளவை சீராக வைத்து உடலின் பிஎச் அளவை கட்டுப்படுத்துகிறது.

காய்ச்சல் மற்றும் சளியை கட்டுப்படுத்த:

துளசி இலைகளை வெறும் வயிற்றில் மென்று சாப்பிடுவது சளி மற்றும் காய்ச்சலை குறைக்க உதவும். மேலும், நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம்.

தொண்டை புண் விரைவில் குணமடையும்:

தொண்டை புண் இருப்பவர்கள் சில துளசி இலைகளை குடிநீரில் வேக வைத்து குடித்து வந்தால், தொண்டை புண் விரைவில் குணமடையும். மேலும், ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தலைவலி: 

தலைவலி காரணமாக அவதிப்படுவோர், துளசி இலைகள் மற்றும் சந்தனத்தை அரைத்து பேஸ்ட் செய்து நெற்றியில் தடவவும். இது உங்கள் தலைவலியை குணமாக்குவது மட்டுமின்றி, நீங்கள் நிம்மதியாக உறங்கவும் வழி வகை செய்யும்.

வாய் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த உதவும்:

துளசி பொடியினை பல் துலக்குவதற்கு பயன்படுத்தலாம். ஏனெனில், இது வாய் துர்நாற்றம் மற்றும் பைரோரியா போன்ற நோய்களைத் தடுக்க உதவும். அதுமட்டுமின்றி, துளசி பல் சொத்தை, பல்வலி மற்றும் பற்குழிகள் ஆகியவற்றின் மேலாண்மைக்கு உதவுகிறது.

தோல் கோளாறுகளை  குணப்படுத்த பயன்படும்;

துளசியின் சாறு லுகோடெர்மா போன்ற பல தோல் பிரச்சினைகளை குணப்படுத்த பயன்படுகிறது. துளசியில் அண்டிபயோடிக், அண்டி-பக்டேரியல் மற்றும் அண்டி கர்சிநோஜெனிக் பண்புகள் நிறைந்துள்ளது. இவை பொதுவாக, சுவாச பிரச்சனைகள் மற்றும் ஆஸ்த்மா அறிகுறிகளை குறைக்க உதவுகின்றது.

பூச்சி கடித்தல்: 

குறிப்பாக மழைக்காலங்களில் பூச்சி கடித்தல் அதிகமாக இருக்கும். இது போன்ற சமயங்களில், துளசியின் வேரினை பேஸ்ட் செய்து பூச்சி கடித்த இடத்தில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.

இதய ஆரோக்கியம் மற்றும் சிறுநீரக கல்: 

துளசி இலைகளின் சாற்றுடன், தேன் கலந்து குடித்து வந்தால் சிறுநீரகக் கற்களை சிறுநீர் பாதை வழியாக உடனடியாக வெளியேற்றும். மேலும், துளசி இலை இதய ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

நீரழிவு மற்றும் புற்றுநோய்க்கு எதிராக: 

துளசி இலையை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், நீரிழிவு வியாதி மற்றும் புற்று நோயின் அபாயம் குறைகிறது. துளசியில் இருக்கும் அன்டி ஆக்ஸ்சிடென்ட் தன்மை, புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடுகிறது. மேலும், உடல் ஆரோக்கியத்திற்கும் வழிவகை செய்கிறது.

முடிக்கு துளசியின் நன்மைகள்: துளசி முடி நரைத்தலை குறைப்பதற்கும், மாசு மற்றும் யு.வி கதிர்களில் இருந்து முடியை பாதுகாக்கவும் உதவுவதாக ஆராய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

கிருமிகளிடம் இருந்து பாதுகாப்பு: 

உடலில் உள்ள செல்களுக்கு, தீங்கு ஏற்படுத்தும் கிருமிகளை துளசி அழிக்கிறது. துளசியில் இயற்கையாகவே உள்ள மருத்துவ குணம், உடலில் உள்ள திசுக்களுக்கு தொற்று அல்லது பாதிப்புகள் ஏற்படும்போது அதை சமாளிக்கும் ஆற்றலை வழங்குகிறது.

இந்துக்களின் புனிதமாக கருதப்படும் துளசியானது, கோயில்களுக்கு நடுவே வளர்க்கப்படுகிறது. இன்றும் பெரும்பாலான இந்திய வீடுகளில் துளசி மாடத்தில் துளசி செடியை வைத்து வழிபடுவதை நாம் பார்க்க முடிகிறது. எனவே, நீங்கள் துளசி செடிகளை வளர்த்து நாள்தோறும் உட்கொண்டு வந்தால், நோயின்றி ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் வாழலாம்.


 

click me!