காஜலுக்கு ராஜ்குமாருடன் காஜல் திருமணம் செய்து வைப்பது என்று அஜய் எடுத்த முடிவுக்கு அவரது குடும்பத்தினரும் ஆதரவாக இருந்துள்ளனர். இதனால், கிராம மக்களும் அதை ஏற்றுக்கொண்டுவிட்டனர் என்கிறார் பஞ்சாயத்து தலைவர் ராம் சாஹர் கூறினார்.
பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் ஒரு நபர் தனது மனைவியை அவரது காதலருக்கு திருமணம் செய்து வைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திள்ளார்.
திருமணத்துக்குப் பின் இருவரும் சுதந்திரமாக வாழ, தனக்கும் அந்தப் பெண்ணுக்கும் பிறந்த இரண்டு குழந்தைகளையும் தானே பார்த்துக்கொள்வதாக வாக்குறுதி அளித்துள்ளார். புதிய வாழ்க்கைத் துணையுடன் திருமண வாழ்க்கையைத் தொடங்கும் மனைவிக்கு குழந்தைகள் சுமையாக இருக்கக்கூடாது என்று இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறுகிறார்.
இச்சம்பவம் பெகுசராயில் உள்ள தஹியா கிராமத்தில் நடந்துள்ளது. அஜய் குமார் (24), காஜல் (22) என்பவரை 2018 இல் திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் குடும்பத்தினர் ஆசியுடன் சிறப்பாக நடைபெற்றது. இருப்பினும், திருமணத்திற்குப் பிறகும் காஜல் தன் காதலன் ராஜ் குமார் தாக்கூருடன் தொடர்பில் இருந்த்துள்ளார்.
திருமணத்திற்கு முன் காஜலும் ஆகாபூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமாரும் காதலித்து வந்துள்ளனர். காஜல் இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகும் அவர்களுக்கிடையேயான காதல் ரகசியமாக தொடர்ந்துள்ளது. சென்ற செவ்வாய்க்கிழமை, காஜல் தனக்கு ராஜ்குமாருடனான உறவை முறித்துக்கொள்ள முடியவில்லை என்று குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.
ராஜ்குமாருடன காஜலின் உறவைப் பற்றி புதன்கிழமைதான் அஜய்க்கு தெரியவந்துள்ளது. "இந்தச் சம்பவத்தைப் பற்றி எனது குடும்பத்தினர் என்னிடம் கூறியபோது நான் முதலில் அதிர்ச்சியடைந்தேன். இருப்பினும், நான் அவளை விட்டுவிடலாம் என்று முடிவு செய்துவிட்டேன். அவள் இன்னும் தாக்கூருடன் தொடர்பில் இருந்ததால் இப்படியே தொடர்வதில் எந்தப் பயனும் இல்லை. அதனால்தான் நானே அவர்களின் திருமணத்தைக்கூட ஏற்பாடு செய்தேன்." என்கிறார் அஜய்.
ஒரு கிராமத்தில் உள்ள கோவிலில் மனைவிக்கு அவரது காதலனுடன் திருமணம் செய்துவைத்துள்ளார் அஜய். அவரது செயல் முதலில் அவரது குடும்பத்தினரையும் ஊர்மக்களையும் ஆத்திரப்பட வைத்தது. ஆனால், காஜலுக்கு ராஜ்குமாருடன் காஜல் திருமணம் செய்து வைப்பது என்று அஜய் எடுத்த முடிவுக்கு அவரது குடும்பத்தினரும் ஆதரவாக இருந்துள்ளனர். இதனால், கிராம மக்களும் அதை ஏற்றுக்கொண்டுவிட்டனர் என்கிறார் பஞ்சாயத்து தலைவர் ராம் சாஹர் கூறினார்.