
திருமணத்திற்கு முன்னாடி, தம்பதிகள் இடையே சுவாரசியமான காதல் இருக்கும். வசீகரம், காதலுக்கு ஒரு சுவாரசியமான அனுபவம். ஆனால், பலருக்கு தங்கள் இணையைத் தேர்ந்தெடுப்பதிலும் குழப்பமான சூழல் நிலவுகிறது. நீங்கள் டேட்டிங் பண்ணும்போது இருவரின் எதிர்காலக் கனவுகள், அதை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் என அனைத்து விஷயங்களையும் பேசி, தெளிவு படுத்திக் கொண்டு திருமண பந்தத்தில் இணைந்தால் மண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
திருமணத்திற்கு முன்பே, இருவரும் வாழ்க்கையில் உள்ள சாவல்களையும், நாம் கடக்க இருக்கும் பாதையையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். உங்கள் காதலன் சிந்தனை அளவில் மிகவும் முதிர்ச்சியடையாதவர் அல்லது நீங்கள் எதிர்பார்த்ததைப் போலல்லாமல் இருப்பதாக நீங்கள் உணரும் தருணங்கள் உள்ளன. இரண்டு காரணங்களால் இது நடக்கலாம். முதலாவதாக, அவர் உங்களைப் போல் மன அழுத்தத்தை எடுத்துக் கொள்ள மாட்டார். அதனால் அவர் எல்லாவற்றிலும் கூலாக இருப்பதாகத் தோன்றலாம். இரண்டாவதாக அவர் உண்மையில் ஒன்றும் அறியாதவராக இருக்கலாம். அவர் உண்மையில் ஒரு பொறுப்பான ஆண் என்பதை உறுதிப்படுத்த, நீங்கள் கவனிக்க வேண்டிய சில அறிகுறிகள் பற்றி இக்கட்டுரையை காணலாம்.
குழப்பமான மனநிலை:
இளைஞர் பருவத்தில் ஆண்களுடையே ஒரு குழப்பமான மனநிலை இருக்கும். ஆனால், ஆண்கள் குறிப்பிட்ட வயதிற்கு பிறகு பொறுப்புள்ள ஆண்மகனாக மாறுகிறார்கள். ஆனால், மாறாக சிலர் தங்கள் தன்னுடையை அறையையும், மற்ற விஷயங்களையும் மிகவும் குழப்பமான நிலையில் கையாள்வர். இந்த விஷயங்களை மாற்ற முயற்சி செய்து தோல்வி அடைந்தால் சிந்திக்க வேண்டியது அவசியம்.
ஒருவருக்கொருவர் தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்:
உங்கள் கடமைகளில் உறுதுணையாக இருக்கத் தயாராக இருக்கும் ஒருவரைத் திருமணம் செய்துகொள்ளுங்கள். உங்களின் தேவைகளை உங்கள் துணையிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை கிடைத்தல் அவசியம். அதேபோன்றதொரு நம்பிக்கையை உங்கள் துணைக்கும் உங்களால் அளிக்க முடியுமா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். உங்களின் முடிவினை மீண்டும் ஒருமுறை பரிசோதித்துக்கொள்ளுங்கள்.
சரியான நிதி திட்டமிடல்:
பொருளாதார ரீதியாக அவர் உங்களுக்குப் பொருத்தமானவரா என்பதைக் கவனியுங்கள். அடிப்படை வீட்டுச் செலவுகளைத் தவிர, பணத் திட்டங்கள் மற்றும் இதர செலவுகள் குறித்து இருவரும் இணைந்து ஒரு சரியான திட்டமிடலை மேற்கொள்ளுங்கள். உங்கள் இணை, அதிகம் செலவு செய்கிறாரா அல்லது சிக்கனமாக உள்ளாரா என்பதையும் கவனிக்க வேண்டும்.
பிரச்சினைகளுக்கு எளிதில் தீர்வு காண்பவரா?
பிரச்சினைகள் வரும்போது கோபத்துடன் முடிவெடுக்கிறாரா அல்லது நிதானமாக உள்ளாரா என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். அதேபோன்று, பிரச்சினைகளைக் கடந்து செல்ல முயல்பவரா அல்லது அதற்குத் தீர்வு காண்பவரா என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.
பரஸ்பர நம்பிக்கை வேண்டும்:
அன்பு, நம்பிக்கை, மரியாதை இந்த மூன்றும்தான் தம்பதியர் பரஸ்பரம் எதிர்பார்க்கும் விஷயங்கள். குறிப்பாக, பரஸ்பர நம்பிக்கை திருமண வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். அது மணமுடிக்க எண்ணும் இருவரிடையே ஏற்படுகிறதா என்பதைக் கவனியுங்கள்.
நீண்டகால திருமண வாழ்விற்கு தாம்பத்தியம் மட்டும் போதாது:
நீங்கள் காதலித்து திருமணம் செய்ய தேர்வு செய்யும் நபர் சிறந்த நண்பராக இருத்தல் வேண்டும். எந்த தகவல்களையும் உங்களுடன் பரிமாறிக்கொள்பவராக இருத்தல் நல்லது. இது, அவர் உங்கள் வாழ்க்கையில் பாதி என்ற நிலையை அவர்களுக்கு உறுதிப்படுத்துகிறது. இது உங்கள் இருவரையும் திருமண வாழ்வில் மகிழ்ச்சியுடன் வழிநடத்த உதவும். குறிப்பாக, உங்களுடன் வெளிப்படையாகப் பேசுகிறாரா என்பதைக் கவனியுங்கள். ஏனெனில், திருமண பந்தம் வலுப்பெற வெளிப்படைத்தன்மை அவசியம்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள பொதுவான காரணிகள் அனைத்தும், இருவரிடமும் இருக்கின்றனவா என்பதை சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள். அவற்றில் ஏதேனும் குறையும்பட்சத்தில் அதைச் சரி செய்யவும் தயாராக இருங்கள். அப்படி இருக்கும்பட்சத்தில், உங்கள் மனம் போல் இந்தப் பயணம் உங்களுக்கு மகிழ்ச்சியாக தொடர வாழ்த்துக்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.