உங்களுக்கு பிரச்சனையா ? 1௦4 கால் பண்ணுங்க..... “ப்ரீ கவுன்சிலிங் தான்” ....!

 
Published : Feb 20, 2017, 05:38 PM ISTUpdated : Sep 19, 2018, 01:38 AM IST
உங்களுக்கு பிரச்சனையா ? 1௦4 கால் பண்ணுங்க..... “ப்ரீ கவுன்சிலிங் தான்” ....!

சுருக்கம்

உங்களுக்கு பிரச்சனையா ? 1௦4 கால் பண்ணுங்க..... “ப்ரீ கவுன்சிலிங் தான்” ....!

அரசு சார்பாக கடந்த 2௦13 டிசம்பர் 3௦ ஆம் ஆரம்பிக்கப்பட்டது  தான்,  இலவச ஆலோசனை மையம், அழைப்பு எண் 1௦4 . இந்த எண்ணிற்கு கால் செய்து ,  நமக்குண்டான  அனைத்து  பிரச்சனைக்கும் தீர்வை  காணலாம் .

குறிப்பாக , மாணவரகள்  தேர்வு நேரத்தின்  போது  சந்திக்கும் பிரச்சனைகள்  முதல் கொண்டு  குடும்ப  பிரச்னை, தீய பழக்கவழக்கங்களுக்கு  அடிமையானவர்கள் , மேரேஜ் கவுன்சிலிங், மன  ரீதியில்  பாதிக்கப்பட்டவர்கள் என அனைத்து  வகையான  பிரச்சனைகளுக்கும்  இலவச ஆலோசனை வழங்கப்படுகிறது .

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வெழுதும் மாணவர்கள்

தற்போது மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு நெருங்க இருப்பதால்,  பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வெழுதும் மாணவர்களுக்கான மனநல ஆலோசனைகனை தமிழக அரசின் 104 சேவை வழங்குகிறது.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் நெருங்குவதைத் தொடர்ந்து மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர் உள்ளிட்டவர்களுக்குத் தேவையான ஆலோசனை 104 சேவையில் வழங்கப்பட்டு வருகிறது.

முந்தைய ஆண்டுகளில் தேர்வு சமயத்தில் ஒரே நாளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 104 சேவையின் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டது  என்பது  குறிப்பிடத்தக்கது.

3 பிரிவுகளின் கீழ்  ஆலோசனை

தேர்வுக்குத் தயாராகுதல், தேர்வு காலத்தின் போது, தேர்வு முடிவுகளை எதிர்கொள்வது என்று 3 பிரிவுகளாக ஆலோசனை வழங்கப்படும்.

இந்த ஆலோசனை வழங்குவதற்கான உளவியல் மருத்துவ நிபுணர்கள், உளவியல் ஆலோசகர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் கொண்ட குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பு

24 மணி நேரமும் ஆலோசனைகளை பெற  1௦4 என்ற எண்ணெய்  எந்த நேரத்திலும் தொடர்பு  கொள்ளலாம்

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Back Pain : காலையில தூங்கி எழுந்ததும் முதுகு வலியா? இதான் காரணம்; உடனே மாத்திக்கங்க!
இந்த விஷயங்கள் எப்போதும் திருப்தியே தராது- சாணக்கியர்