
வெளியில் செல்லும் போது எந்தெந்த சகுனங்கள் நல்லது கெட்டது என நாம் நம் வாழ்வில் கடைப்பிடிக்கிறோம் என்பதை பார்க்கலாம்.
உதாரணம் :
பூனை
வெற்றுக் குடத்துடன் வரும் பெண்
விதவை பெண்
கூன் குருடு இவர்கள் யாரவது எதிரில் வந்தால் அது கெட்ட சகுனமாகபார்க்கப்படுகிறது.
இதே போன்று, இரவு நேரத்தில் ஆந்தை கத்தினால், அதனை கெட்ட சகுனம் என கருதி அதனை விரட்டுவார்கள்
அதே போன்று கழுதை கத்தினால் நல்ல சகுனம் என்பார்கள்
காக்கை கத்தினாலும், கழுதை கத்தினாலும் அது நல்ல சகுனமே.. வலமிருந்து இடமாக செல்லும் பூனை
பூனை வலமிருந்து இடமாக சென்றால் துன்பம் விலகுகிறது என்பது பொருள்.
நம் வீட்டு குப்பைகளை வலமிருந்து இடமாகத்தான் தள்ளுகிறோம் அல்லவா...?
அதேபோன்று, கோடு போடும் போதும் சரி, எழுதும் போதும் சரி இடமிருந்து வலமாக போடுகிறோம் அல்லவா...? இவ்வாறு சென்றால் துன்பம் வர வாய்ப்பு உள்ளது என்பது பொருள்...
எனவே தான் யானை வலது பக்கம் போனாலும் பூனை போகக்கூடாது என்பார்கள்
நாய் ஓலமிடுதல்
இதே போன்று நாய் ஓலமிட்டால் அது கெட்ட சகுனமாக பார்க்கப்படுகிறது..அதாவது மரண ஓலமாக கருதப்படுகிறது.
இதே போன்று நரியை பொறுத்த வரையில் எந்த பக்கம் சென்றாலும் அது நல்லது என்பார்கள்....
விலங்குகளை வைத்து நல்ல சகுனம் கெட்ட சகுனம் பார்ப்பது என்பது காலங்காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.