உயர்நீதிமன்ற மதுரை கிளையையே பீல் பண்ண வைத்த தமிழ் சேனல்கள்..!

By ezhil mozhiFirst Published Mar 6, 2019, 7:37 PM IST
Highlights

தமிழ் வளர்ச்சிக்காக தினமும் 10 நிமிடமாவது தமிழ் சேனல்கள்கள்  நேரம் ஒதுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்து உள்ளது.
 

தமிழ் வளர்ச்சிக்காக தினமும் 10 நிமிடமாவது தமிழ் சேனல்கள்கள் நேரம் ஒதுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்து  உள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில்வழக்கறிஞர் பி.ஸ்டாலின் ஒருவழக்கை தொடர்ந்தார்.அதில், மதுரை உலக தமிழ்ச்சங்கத்தில் உள்ள நூலகத்தில் தமிழ் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து தமிழ் நூல்கள் தமிழ் ஆராய்ச்சி நூல்களை வைக்கவும் மற்றும் புதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என் வழக்கு தொடர்ந்து இருந்தார். 

இது குறித்த விசாரணை முடிவில் இன்று,"வெளிநாடுகளில் தமிழை வளர்க்க எடுக்கப்படும் முயற்சி கூட, தமிழகத்தில் எடுப்பதில்லை என்றும் தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் வளர்ச்சிக்காக தினமும் பத்து நிமிடங்கள் ஒதுக்கினால் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்றும்  இதற்காக அனைத்து தமிழ் சேனல்களையும் நீதிமன்றம் தாமாக முன்வந்து எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறது என்றும் தெரிவித்தது நீதிமன்றம்.

இது தொடர்பாக அனைத்து தமிழ் சேனல்களும் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்து அடுத்த கட்ட விசாரணையை வரும் 13 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உள்ளது நீதிமன்றம். 

click me!