சிவகுமார் அவர்களின் வெற்றிக்கு அவர் தினந்தோறும் செய்யும் யோகாவும் ஓர் காரணமாக இருந்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.
அந்தரத்தில் பறந்து யோகா செய்யும் நடிகர் சிவகுமார்...! உங்கள் கண்ணை உங்களாலே நம்ப முடிகிறதா..?
ஒருவரின் வெற்றிக்கு பின்னால் ஏதோ ஓர் முக்கிய காரணம் இருக்கும். அப்படி ஒரு நிலையில் வாழ்க்கையில் வெற்றி பெற்று சமுதாயத்தில் சிறந்து விளங்கும் மாமனிதர்கள் அவர்களுக்கென சில முக்கிய குறிக்கோள்களையும் கட்டுப்பாடுகளும் வைத்திருப்பார்கள். அவர்களுடைய வாழ்க்கை முறையில் ஏதாவது ஒரு சிறப்பம்சம் கொண்டிருப்பார்கள்.
ஒருவர் ஒரு சாதனையை செய்வதற்கு முன்பாக மனதளவிலும் உடல் அளவிலும் ஆரோக்கியமாக இருப்பது மிக மிக அவசியமானது. அப்படி இருந்தால் மட்டுமே எந்த ஒரு சாதனையும் செய்ய முடியும். இதற்கு உதாரணமாக நடிகர் சிவகுமார் அவர்களை குறிப்பிட்டு சொல்லலாம். அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்ற பல பிரபலமானவர்கள் என யாரை எடுத்துக்கொண்டாலும், அவர்கள் எப்போதும் உற்சாகமாக இருப்பதற்கு உறுதுணையாக இருப்பது அவர்களுக்கு பிடித்த ஓர் செயலாக இருக்கும் என சொல்லலாம்.
அது நடனமாக இருக்கலாம்; உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி செய்வதாக இருக்கலாம்; பாட்டு கேட்பதாக இருக்கலாம்; நடனம் ஆடுவதாக இருக்கலாம்.. இவை அனைத்திற்கும் மேலாக யோகா செய்வதாகவும் இருக்கலாம். ஆம் இப்படி யோகாவின் மகிமையை இன்ச் பை இன்ச்சாக உணர்ந்து வாழ்க்கையை அற்புதமாக, எந்த ஒரு அழுத்தமும் இல்லாமல் கொண்டு செல்கிறார் நடிகர் சிவகுமார். இப்படி நடிகர் சிவகுமாரின் மகன்களான நடிகர் சூர்யா மற்றும் நடிகர் கார்த்திக் என ஒவ்வொருவராக இன்று சினிமா இண்டஸ்ட்ரியில் முத்திரை பதித்து உள்ளனர். இவர்கள் கூட இந்த அளவிற்கு உடலை அசைந்து கொடுத்து யோகா செய்ய முடியுமா என தெரியாது.
ஆனால், இவ்வளவு வயதிலும் நடிகர் சிவகுமார் மிக எளிதாக உடலை வளைத்து யோகா செய்வது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. அவருடைய ஆரோக்கியத்திற்கும் மன அமைதிக்கும், சோர்வு இல்லாமல் எப்போதும் உற்சாகமாக இருப்பதற்கும் வாழ்க்கையை எளிதாக எடுத்துச் செல்வதற்கும் உறுதுணையாக இருந்துள்ளது யோகா.
நடிகர் சிவகுமார் சாதாரண யோகா செய்வது மட்டுமின்றி கடினமாக இருக்கக்கூடிய ஆசனங்களையும் கூட மிக எளிதாக செய்கிறார். அதற்கு இந்த புகைப்படங்களே ஆதாரம். இளைஞர்கள் கூட செய்யமுடியாத கடினமான ஆசனங்களை மிக எளிதாக செய்து.. வயதோ உடலோ பெரிய விஷயமே இல்லை.. ஆரோக்கியமாக நாம் இருந்தால், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டு எதையும் இந்த உலகில் சாதிக்கலாம் என்பதை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது இந்த போட்டோக்கள். சிவகுமார் அவர்களின் வெற்றிக்கு அவர் தினந்தோறும் செய்யும் யோகாவும் ஓர் காரணமாக இருந்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.