ட்ரெண்டாகும் அபிநந்தனின் "மீசை முறுக்கு" மாடல்..! அட ஆண்கள் மட்டுமல்ல.. ஆர்வத்தின் உச்சத்தில் பெண்கள் ..!

By ezhil mozhiFirst Published Mar 4, 2019, 7:11 PM IST
Highlights

பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய போர் விமானியான அபிநந்தன் தான் ஒட்டுமொத்த இந்தியாவுக்கே வீரராக திகழ்கிறார். அந்த அளவிற்கு இந்தியாவிற்கு பெருமை சேர்த்து உலக அளவில் பிரபலம் அடைந்தவர். 

ட்ரெண்டாகும் அபிநந்தனின் "மீசை முறுக்கு" மாடல்..!

பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய போர் விமானியான அபிநந்தன் தான் ஒட்டுமொத்த இந்தியாவுக்கே வீரராக திகழ்கிறார். அந்த அளவிற்கு இந்தியாவிற்கு பெருமை சேர்த்து உலக அளவில் பிரபலம் அடைந்தவர். 

காஷ்மீரின் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் 44 ராணுவ வீரர்கள் பலியானதை தொடர்ந்து பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாமை அழித்தது. அதன்பின் எல்லை கட்டுப்பாட்டை மீறி இந்தியாவிற்குள் நுழைந்த பாகிஸ்தான் விமானத்தையும் சுட்டு வீழ்த்தியது இந்தியா.

அப்போது வான்வழி தாக்குதலின்போது இந்திய விமானமும் சுடப்பட்டதால் பாராசூட் மூலம் தரை இறங்கிய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறைபிடித்தனர். பின்னர் உலக நாடுகள் கொடுத்த அழுத்தம் மற்றும் இந்தியாவின் வல்லமையால் வெறும் மூன்றே நாட்களில் இந்தியாவிடம் விமானியை ஒப்படைத்தது பாகிஸ்தான்.

அபிநந்தன் வருகையை ஒட்டுமொத்த இந்தியாவும் வரவேற்றது. அவரை கௌரவிக்கும் பொருட்டு அவருக்கு ரசிகர் ரசிகராகவே மாறிவிட்டனர் நம் இந்திய மக்கள். அதில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் அதிக ஆர்வமாக அபிநந்தன் வைத்துள்ள மீசை மாதிரியே பெண்களும் வரைந்து கொள்கின்றனர். மேலும் ஆண்களும் அபிநந்தன் வைத்துள்ள அதே ஸ்டைலில் மீசையை வைத்துக்கொள்கின்றனர். தற்போதைக்கு அபிநந்தனின் இந்த மீசை முறுக்கு தான் இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்டிங்கா உள்ளது. 

click me!