அடங்காமல் ஊர் சுற்றியவனை அலறவிட்ட"பேய்"..! பயத்தில் தலைதெறிக்க ஓடி பாலத்தின் மீது ஏறிய நபர்..!

thenmozhi g   | Asianet News
Published : Apr 09, 2020, 01:02 PM IST
அடங்காமல் ஊர் சுற்றியவனை அலறவிட்ட"பேய்"..! பயத்தில் தலைதெறிக்க ஓடி பாலத்தின் மீது ஏறிய நபர்..!

சுருக்கம்

கோவாவில் உள்ள ஒரு  பாலத்தின் மேல் இரு சக்கர வாகனத்தில் இரண்டு பேர் வந்துள்ளனர். அப்போது அவரை வழிமறித்த ஒரு வெள்ளை உடை போட்டவர், பேயை போல நின்று பயம் காட்டினார்.

அடங்காமல் ஊர் சுற்றியவனை அலறவிட்ட "பேய்"..! பயத்தில் தலைதெறிக்க ஓடி பாலத்தின் மீது ஏறிய நபர்..!

கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் முதற்கட்டமாக 21 நாட்களுக்கு, அதாவது வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் அத்தனையும் மீறி தேவையில்லாமல் வெளியில் சுற்றி திரியும் வாலிபர்களிடமும், கூட்டம் சேரும் பொதுமக்களிடமும் விழுப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒத்திகை செய்து காண்பித்தும், கொரோனா வைரஸ் போன்று தலையில் வைத்து, அது குறித்து பாதிப்பையும் விளக்கி வந்தனர் காவல் துறையினர். இந்த நிலையில், ஊரடங்கில் அடங்காமல் இரவு நேரத்தில் சுற்றி திரிந்த நபர்களுக்கு வித்தியாசமான முறையில் கொரோனா பயத்தை காண்பிக்க முயற்சி செய்துள்ளார் ஒரு நபர் 

அதாவது கோவாவில் உள்ள ஒரு  பாலத்தின் மேல் இரு சக்கர வாகனத்தில் இரண்டு பேர் வந்துள்ளனர். அப்போது அவரை வழிமறித்த ஒரு வெள்ளை உடை போட்டவர், பேயை போல நின்று பயம் காட்டினார். இதை பார்த்த உடன் வாகனத்தில் இருந்த ஒருவர் இறங்கி ஓட்டம் பிடித்து பாலத்தின் மீது ஏறிய காட்சிகள் அங்கு வைத்திருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

எப்படியோ யாரோ ஒரு நபர் இதுபோன்ற வேடங்களை போட்டு, கொரோனா வராமல் தடுக்க  இப்படியொரு வித்தியாசமான முயற்சி செய்துள்ளார் என்றால் அவரை பாராட்ட வேண்டும் என மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் . 

இதற்கு முன்னதாக இதே பாலத்தை கடந்து செல்லும் அனைவருக்கும் கொரோனா விழிப்புணர்வு குறித்து பலமுறை எச்சரித்தும் ஒரு சிலர் தேவை இல்லாமல் சுற்றி திரிவதை கண்ட யாரோ தான் இப்படி செய்திருக்க முடியும் என்றும் பரவலான முறையில் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்