சிக்கி சின்னாபின்னமான 60 கல்லூரி மாணவிகள்..! ஆபாச படம் எடுத்த பேஸ்புக் காதல் கும்பல்.. கைதான 7 பேர் கொடுத்த திடுக்கிடும் தகவல் பின்னணி..!

Published : Feb 26, 2019, 07:45 PM ISTUpdated : Feb 26, 2019, 07:51 PM IST
சிக்கி சின்னாபின்னமான 60 கல்லூரி மாணவிகள்..! ஆபாச படம் எடுத்த  பேஸ்புக் காதல் கும்பல்.. கைதான 7 பேர் கொடுத்த திடுக்கிடும் தகவல் பின்னணி..!

சுருக்கம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை ஆபாச படம் எடுத்து அவர்களை மிரட்டி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இதுவரை 7 பேர் கைதாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிக்கி சின்னாபின்னமான 60 கல்லூரி மாணவிகள்..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை ஆபாச படம் எடுத்து அவர்களை மிரட்டி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இதுவரை 7 பேர் கைதாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவருக்கு, முகநூல் மூலமாக திருநாவுக்கரசு என்ற நபர் முகநூல் அழைப்பு கொடுத்து உள்ளார். இவர்களின் நட்பு காலப்போக்கில் காதலாக மாறி உள்ளது.

இவரை நம்பி வெளியில் வந்த அந்த மாணவி, திருநாவுக்கரசு உடன் காரில் ஏறி உள்ளார் காரின் பின்புறமாக காதலன் திருநாவுக்கரசு அருகில் அமர, முன் சீட்டில் இருவர் இருக்கையில் அமர்ந்து உள்ளனர். அப்போது  மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட முயன்றுள்ளார் திருநாவுக்கரசு. மேலும், இதனை வீடியோ எடுத்து வைத்து அந்த மாணவியிடம் மிரட்டி செயினை பறித்து சென்று உள்ளனர்.இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில்,பேஸ்புக் ஆன்லைன் காதல் கும்பலை பிடிக்க தொடங்கியது.

அதன் பேரில் தற்போது வரை 7 பேரை கைது செய்து உள்ளது போலீசார். இவர்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து போன்களிலும் ஆபாச வீடியோக்களை வைத்து உள்ளனர். மேலும் பல பெண்களின் வாழ்கை  இவர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகி உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

பல வருடங்களாக பல பெண்களை இது போன்று மிரட்டி பணம் நகை வாங்கி வந்துள்ளனர். இன்னும் இதில் பல பேருக்கு தொடர்பு இருப்பதால் மற்றவர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர் போலீசார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

புத்தாண்டை தொடங்க 'சாணக்கியர்' சொல்லும் சிறந்த வழி
புத்திசாலிகளின் குணங்கள் இதுதான் - சாணக்கியர்