வீடியோ காலில் திருமணம்! அலங்காரத்தோடு மணமகன்-மணமகள்! ஒரே நேரத்தில் வீடியோவில் இணைந்த உறவினர்கள்!

By ezhil mozhiFirst Published Apr 7, 2020, 1:43 PM IST
Highlights

மும்பையை சேர்ந்த 29 வயதான வணிக கடற்படை அதிகாரியாக பணிபுரியும் ப்ரீத் சிங் என்பவருக்கும் டெல்லியை சேர்ந்த மீர் கவூர் என்ற பெண்ணிற்கும் ஏப்ரல் 4ஆம் தேதி திருமணம் நடைபெற பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

வீடியோ காலில் திருமணம்! அலங்காரத்தோடு மணமகன்-மணமகள்! ஒரே நேரத்தில் வீடியோவில் இணைந்த உறவினர்கள்!
   
நாடு முழுவதும் வரும் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், இந்த இடைப்பட்ட காலத்தில் நடக்க இருந்த பல்வேறு நிகழ்ச்சிகளும் தடைபட்டு உள்ளது. இப்படி ஒரு நிலையில் ஆன்லைனிலேயே திருமணம் செய்துகொண்ட ஒரு தம்பதியினர் பற்றிய செய்திதான் இது.

மும்பையை சேர்ந்த 29 வயதான வணிக கடற்படை அதிகாரியாக பணிபுரியும் ப்ரீத் சிங் என்பவருக்கும் டெல்லியை சேர்ந்த மீர் கவூர் என்ற பெண்ணிற்கும் ஏப்ரல் 4ஆம் தேதி திருமணம் நடைபெற பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. அவர்களுடைய உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். இந்த ஒரு நிலையில் கொரோனா எதிரொலியால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில் யாரும் எந்த நாட்டிலிருந்தும் இந்தியா வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்தியாவிற்குள்ளும் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்லவும் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு பயணிக்கவும் கூட முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, அதேவேளையில் திருமணமும் குறிப்பிட்ட நாளில் செய்ய வேண்டும் என்பதற்காக உறவினர்கள் அனைவரும் தொலைபேசி மூலமாக பேசி தொலைபேசி, வீடியோகால் மூலமாகவே  திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி திருமண அலங்கார உடைகளுடன் மணமகன் மணமகள் அவரவர் இடத்தில் தயாராக இருந்தன. பின்னர் வீடியோ கால் செய்து இணைய வழியிலேயே அனைவரின் ஆசிர்வாதத்துடன் திருமணம் நடைபெற்றது. 

தற்போது இருக்கக்கூடிய கொரோனா பிரச்சனை முடிவு பெற்ற பின் சீக்கிய மதப்படி திருமண நிகழ்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் பல்வேறு நபர்களும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

click me!