எழுமிச்சை பழமும் 7 சுவாரஸ்யமும்..! தெரியுமா இந்த அற்புதம் உங்களுக்கு?

By ezhil mozhiFirst Published Jun 29, 2019, 8:29 PM IST
Highlights

எலுமிச்சை ஜூஸ் எந்த அளவிற்கு நம் உடலுக்கு ஏற்றது என்பதை கீழ் கொடுக்கப்பட்டு உள்ள டிப்ஸ் பார்த்து தெரிஞ்சிக்கோங்க...
 

எழுமிச்சை பழமும் 7 சுவாரஸ்யமும்..! தெரியுமா இந்த அற்புதம் உங்களுக்கு? 

எலுமிச்சை ஜூஸ் எந்த அளவிற்கு நம் உடலுக்கு ஏற்றது என்பதை கீழ் கொடுக்கப்பட்டு உள்ள டிப்ஸ் பார்த்து தெரிஞ்சிக்கோங்க...

வெளியூர் பயணத்தின்போது.... சிறுநீரகத் தொற்று ஏற்படாமல் இருக்க எலுமிச்சை ஜூஸ் அருந்தி வரலாம். 

எலுமிச்சை, ஆன்டிஆக்ஸிடன் டாகச் செயல்பட்டு, ரத்தத்தைச் சுத்திகரிக்கும் மற்றும் தோல் நோய்கள் எதுவும் நம்மை ஆண்ட விடாமல் பார்த்துக்கொள்ளும் 

காலையில் வெந்நீரில் 5 - 10 மி.லி எலுமிச்சைச் சாறு கலந்து குடிப்பது வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கும். 

வாய் துர்நாற்றம், பல்லில் வலி, ஈறுகளில் ரத்தம் போன்ற பாதிப்புகள் இருந்தால், எலுமிச்சைச் சாற்றை, மிதமான வெந்நீரில் கலந்து தொடர்ந்து வாய் கொப்பளித்து வர சரியாகி விடும். 

காலையில் எழும் போதே சளியுடன் கூடிய எச்சில், வாந்தி வருவது போன்ற உணர்வு ஒரு சிலருக்கு இருக்கும். அல்லவா..? இதற்கு, 10 மி.லி. எலுமிச்சைச் சாற்றுடன் 5 மி.லி. இஞ்சிச் சாறு, சிறிது தேன் சேர்த்து, சுடுநீரில் கலந்து குடிக்கலாம். நல்ல நிவாரணம் கிடைக்கும் 

மூல நோய் இருப்பவர்கள் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை ஒரு எலுமிச்சைப் பழத்தை இரண்டாக வெட்டி, அதில் கறுப்பு உப்பு கலந்து, வாயில் வைத்துக்கொண்டால் வலி குறையும். 

அசைவ உணவை உண்ட உடன் சில நிமிடங்கள் கழித்து, எழுமிச்சை சாற்றை பருகினால் மிக எளிதாக ஜீரணிக்க முடியும்.தேவை இல்லாத கொலஸ்ட்ரால் உடலில் தங்காது

click me!