குழந்தைகளுக்கு கட்டாயம் சொல்லிக் கொடுக்க வேண்டிய '5' பழக்கங்கள்!!

Published : Dec 20, 2024, 12:54 PM IST
குழந்தைகளுக்கு கட்டாயம் சொல்லிக் கொடுக்க வேண்டிய '5' பழக்கங்கள்!!

சுருக்கம்

Personal Hygiene Tips for Kids : உங்க குழந்தைக்கு தனிப்பட சுகாதாரத்தை இந்த 5 பழக்கங்களை கண்டிப்பாக சொல்லிக் கொடுங்கள்.

தனிப்பட்ட சுகாதாரம் என்பது நம் ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்காத விஷயங்களை கொண்டது. இது நம் அனைவருக்கும் மிகவும் அவசியம். குறிப்பாக நம் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு தனிப்பட்ட சுகாதாரத்தை பற்றி சொல்லிக் கொடுப்பது ஒவ்வொரு பெற்றோரின் பொறுப்பு. இல்லையெனில் அவர்கள் பிற்காலத்தில் அது தொடர்பான குறைபாடுகள் அவர்களது வாழ்க்கை முறையை மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். 

குழந்தைகளிடம் சுகாதாரம் இல்லை என்றால் அவர்கள் எளிதில் நோய்வாய் படுவார்கள். காரணம் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி நம்மை விட மிகவும் பலவீனமாக இருக்கும். எனவே, குழந்தைகளின் சுகாதாரத்தில் சிறப்பு அக்கறை எடுத்து சிறுவயதிலிருந்து அவர்களுக்கு தனிப்பட்ட சுகாதார பழக்கங்களை கற்றுக்கொடுங்கள். இத்தகைய சூழ்நிலையில், குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய 5 தனிப்பட்ட சுகாதார பழக்கங்கள் என்ன என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

1. கை தூய்மை:

ஆரோக்கியமாக இருக்க அவர்களின் கை தூய்மையாக இருப்பது மிகவும் அவசியம். ஏனெனில் கைகளில் தான் பல வகையான பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் இருப்பதால், அவை எளிதாக நம் உடலுக்குள் நுழைகின்றன. எனவே குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்து கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று கற்றுக் கொடுங்கள். இதற்கு அவர்கள் சாப்பிடுவதற்கு முன் மற்றும் பின் கைகளை நன்றாக சுத்தம் செய்ய பழக்கப்படுத்துங்கள் அதுபோல அவர்கள் விளையாடிய பிறகும், செல்லப்பிராணிகளை தொட்ட பிறகும், நோயாளிகளை சந்தித்த பிறகும், வெளியில் இருந்தோ அல்லது வெளியூர்களில் இருந்தோ வீட்டிற்கு வந்ததும் கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்று சொல்லுங்கள்.

2. பற்கள் தூய்மை:

குழந்தைகளுக்கு பற்கள் தூய்மையாக இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுங்கள். அதாவது அவர்கள் எதையாவது சாப்பிட்ட பிறகு கண்டிப்பாக வாய் கொப்பளிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுங்கள். அதுபோல காலை எழுந்ததும் மற்றும் தூங்குவதற்கு முன் என இரண்டு வேலையும் கண்டிப்பாக பற்களை துலக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுங்கள். முடிந்தால் ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பிறகு பல் துலக்க பழக்கப்படுத்துங்கள் மேலும் நாக்கையும் சுத்தம் செய்ய சொல்லுங்கள். 

இதையும் படிங்க: மழை, குளிர்ல கூட குழந்தைகளை ஆரோக்கியமா வைத்திருக்க '5' அட்வைஸ்

3. குளியல் தூய்மை:

நான்கு வயதிற்கு பிறகு உங்கள் குழந்தைக்கு குளியல் தொடர்பான தூய்மையை கண்டிப்ப்ய் சொல்லிக் கொடுங்கள். அதாவது ஏன் தினமும் குளிக்க வேண்டும்.. எப்படி குளிக்க வேண்டும்.. எந்தெந்த உடல் உறுப்புகளை சுத்தமாக வைக்க வேண்டும் என்பதை சொல்லிக் கொடுங்கள். முக்கியமாக அவர்கள் குளிக்கும் போது தலைமுடி, கழுத்து, இடுப்பு, வயிறு, கை, கால்கள் மற்றும் முழங்கை, முழங்கால் ஆகியவற்றை சரியான முறையில் சுத்தம் செய்வது எப்படி என்று கற்றுக் கொடுங்கள்.

இதையும் படிங்க:  பிறந்த குழந்தைகளை வைத்து போட்டோஷூட் செய்றது ஆபத்து..  குழந்தையோட ஆரோக்கியத்தையே பாதிக்கலாம்!! 

4. நகங்கள் தூய்மை:

நகங்களை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும் என்று உங்கள் குழந்தைக்கு சொல்லிக் கொடுங்கள். ஏனென்றால் நகத்தில் அழுக்குகள், பாக்டீரியாக்கள் மறைந்திருக்கும் அதை நேரடியாக நம் உடலுக்குள் நுழைந்து விடும். இதனால் ஆரோக்கியம் பாதிக்கப்படும். எனவே நகங்களை அவ்வப்போது வெட்ட வேண்டும், குளிக்கும்போது நகங்களை சுத்தம் செய்ய வேண்டும் போன்ற விஷயங்களை கற்றுக் கொடுங்கள்.

5. கழிப்பறை பயன்படுத்தும் முறை:

உங்கள் குழந்தைக்கு நான்கு வயது ஆன பிறகு கழிப்பறியை பயன்படுத்துவதற்கான சரியான வழியை சொல்லிக் கொடுங்கள். முக்கியமாக கழிப்பறையை பயன்படுத்திய பிறகு சோப்பு போட்டு கைகளை நன்கு சுத்த செய்ய வேண்டும் என்றும், விரல்களுக்கு இடையில், கைகளுக்குப் பின்புறம் மற்றும் நகங்களை நன்கு சுத்தம் செய்ய வேண்டும் என்றும் கற்றுக் கொடுங்கள்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!
இந்த '5' விஷயமும் அதிர்ஷ்டம் இருந்தால்தான் கிடைக்கும்- சாணக்கியர்