ஊரடங்கு உத்தரவு அறிவிப்பதிலும் ஓர் அரசியல்! முந்திக்கொண்ட"பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்கள்"..!

By ezhil mozhiFirst Published Apr 11, 2020, 7:30 PM IST
Highlights

மேற்கு வங்க மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை ஏப்.30ம் தேதி வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளார் மம்தா பேனெர்ஜி. அதாவது ஒடிசா,பஞ்சாப்,மகாராஷ்டிரா மாநிலங்களை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது 

ஊரடங்கு உத்தரவு அறிவிப்பதிலும் ஓர் அரசியல்! முந்திக்கொண்ட"பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்கள்"..! 

21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு, வரும் 14 ஆம் தேதி முடிவடையும் நிலையில் மேலும் 2 வாரத்திற்கு நீட்டிக்க உள்ளதாக தங்கள் வெளியாகி உள்ளது.

இன்று பாரத பிரதமர் அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை செய்த பின்னர்  இன்று பிரதமர்  மோடி முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கை மேலும் 2 வாரத்திற்கு நீட்டிக்க வேண்டும் என அனைத்து மாநில முதல்வர்களும் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

இந்த ஒரு நிலையில்,மேற்கு வங்க மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை ஏப்.30ம் தேதி வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளார் மம்தா பேனெர்ஜி. அதாவது ஒடிசா,பஞ்சாப்,மகாராஷ்டிரா மாநிலங்களை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது 

இதற்கு முன்னதாக மகாராஷ்டிராவில் ஏப்.30 வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்புவெளியிட்டு உள்ளார். இதன் படி பார்த்தால், ஊரடங்கு நீட்டிப்பதில் அரசியல் உள்ளது என்பதை உணர்த்தும் வகையில்  பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களான  ஒடிசா, பஞ்சாப், மகாராஷ்டிரா மாநிலங்களை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் ஊரடங்கு நீட்டிப்புடங்கு  நீடிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

தமிழகத்தில் ஊரடங்கு 

தமிழகத்தில் நிச்சயம் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்றே தெரிகிறது.தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்க படுவதை பிரதமர் மோடிதான் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக முடிவு எடுப்பதை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

click me!