12 ராசியினரின் நிலைமை இப்படித்தான்..!

Published : Oct 30, 2019, 03:31 PM IST
12 ராசியினரின் நிலைமை இப்படித்தான்..!

சுருக்கம்

அடிப்படை வசதிகள் பெருகும். கனிவான பேச்சால் எல்லோரையும் கவர செய்வீர்கள்.  குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். அக்கம்பக்கத்தினர் உங்களுக்கு ஆதரவாக செயல் படுவார்கள்.

12 ராசியினரின் நிலைமை இப்படித்தான்..! 

மேஷ ராசி நேயர்களே...!

ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. நன்கு அறிமுகம் இல்லாதவர்களை வீட்டில் அனுமதிக்க வேண்டாம். ஆன்மீக தலங்களுக்கு சென்று வழிபாடு செய்வீர்கள்.

ரிஷப ராசி நேயர்களே..!

அடிப்படை வசதிகள் பெருகும். கனிவான பேச்சால் எல்லோரையும் கவர செய்வீர்கள்.  குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். அக்கம்பக்கத்தினர் உங்களுக்கு ஆதரவாக செயல் படுவார்கள்.

மிதுன ராசி நேயர்களே...!

சமூகத்தில் பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் உங்களுக்கு உதவி செய்ய முன் வருவார்கள். உங்களை கண்டும் காணாமல் சென்ற ஒரு சிலர் மீண்டும் உங்களை நேரில் வந்து சந்திப்பார்கள். பணவரவு எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும்.

கடக ராசி நேயர்களே...!

எதையும் சாதித்துக் காட்ட வேண்டுமென்ற மன வலிமை அதிகமாக இருக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த பணம் உங்களுக்கு வந்து சேரும். உங்களுடைய திறமையான பேச்சால் பல காரியங்களைச் மிக எளிதாக செய்து காட்டுவீர்கள்.

சிம்மராசி நேயர்களே..!

வெளிநாட்டில் இருக்கும் உங்களது நண்பர் தக்க சமயத்தில் வந்து உதவி செய்ய நேரிடலாம். வீடு வாகனத்தை வாங்குவதும் சீரமைப்பது குறித்து முக்கிய ஆலோசனைகள் செய்வீர்கள். பழைய நண்பரை சந்தித்து ஒரு சில விஷயங்களை பேசி மனம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

கன்னி ராசி நேயர்களே...!

புதிய நபர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள். எதிர்பாராத பண வரவு இருக்கும். வருங்காலத்திற்காக சேமிக்கத் இப்போதே திட்டமிடுவீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வார்கள்.

துலாம் ராசி நேயர்களே...!

எதார்த்தமாகவும் அனுபவப் பூர்வமாகவும் பேசுவீர்கள். பங்குவர்த்தகத்தில் பணம் வர வாய்ப்பு உண்டு. உறவினர்கள் நண்பர்கள் சுயரூபம் உங்களுக்கு தெரியவரும். வாகனச் செலவு ஏற்படும்.

விருச்சிக ராசி நேயர்களே...!

கோபப்படாதீர்கள். சில காரியங்களில் நிம்மதி இல்லாமல் மன குழப்பம் ஏற்படும். முக்கிய விஷயத்தில் முடிவெடுக்க முடியாமல் தடுமாற்றம் ஏற்படும்.

தனுசு ராசி நேயர்களே...!

சுப செலவுகள் அதிகரிக்கக் கூடிய நாள். திருமணப் பேச்சுவார்த்தையில் உங்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். யாருக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் தலையிட வேண்டாம். விருந்தினர் வருகை இருக்கும்.

மகர ராசி நேயர்களே...!

தேவைக்கேற்ற பணம் உங்களுக்கு கிடைக்கும். வாங்கியிருந்த கடனை திரும்ப கொடுப்பீர்கள். பங்குவர்த்தகத்தில் போதுமான பணம் வந்து சேரும். கணவன் மனைவியிடையே நட்பு அதிகரிக்கும்.

கும்ப ராசி நேயர்களே...!

பல பிரபலங்கள் அரசியல்வாதிகள் என அனைவரின் அறிமுகம் கிடைக்கும். தொடங்கிய வேலைகள் தடங்கல் இன்றி நடக்கும். வெளி வட்டாரத்தில் உங்கள் மதிப்பு மரியாதை கூடும். திடீர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

மீனராசி நேயர்களே..!

தொட்ட காரியங்கள் துலங்கும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை மதித்து நடந்துக்கொள்வது நல்லது 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

வீட்டில் துளசி செடி வைத்தால் கிடைக்கும் நன்மைகள்
குழந்தையின் ஞாபகசக்தியை அதிகரிக்கும் '7' அற்புத உணவுகள்