India@75 : இன்குலாப் ஜிந்தாபாத் முழக்கத்தின் தந்தை.. யார் இந்த ஹஸ்ரத் மோஹானி ?

By Raghupati R  |  First Published Aug 16, 2022, 10:10 PM IST

சுதந்திரப் போராட்ட வீரர், கவிஞர், கம்யூனிஸ்ட் என பல்வேறு முகங்களை கொண்டவர் ஹஸ்ரத் மோஹானி.


இன்குலாப் ஜிந்தாபாத் என்ற புகழ்பெற்ற முழக்கத்தை உருவாக்கியவர் யார் ? என்ற கேள்விக்கு பதில் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் என்பது சந்தேகம் தான். அவர் வேறு யாருமில்லை, ஹஸ்ரத் மோஹானி தான். சுதந்திரப் போராட்ட வீரர், கவிஞர், கம்யூனிஸ்ட் என பல்வேறு முகங்களை கொண்டவர். அவர் இஸ்லாத்தில் உறுதியான நம்பிக்கை கொண்டவராகவும், சிறந்த கிருஷ்ண பக்தராகவும், சூஃபி சீடர்களாகவும் இருந்துள்ளார்.

Latest Videos

ஹஸ்ரத் மோஹானி 1875 ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தின், உன்னாவோவில் உள்ள மோகன் என்ற கிராமத்தில் பிறந்தார். ஈரானில் இருந்து புலம் பெயர்ந்தது இவரது குடும்பமாகும். ஹஸ்ரத் மோஹானி என்பது அவரது பெற்றோர்களால் சையத் ஃபஸ்ல் உல் ஹசன் என்று பெயரிடப்பட்டது. பின்னர் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்பட்ட தீவிர பிரிட்டிஷ் சார்பு முகமதின் ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரியில் படிக்கும் போது, பிரிட்டிஷ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக வெளியேற்றப்பட்டார். 

1903 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட மொஹானி அடுத்த ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1921 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் அகமதாபாத் மாநாட்டில் முதன்முதலில் முழு சுதந்திர கோரிக்கையை எழுப்பினார்கள்  ஹஸ்ரத் மோஹானி மற்றும் சுவாமி குமரானந்த். பின்னர் ஆசாத் கட்சி என்ற புதிய கட்சியை உருவாக்கி, முஸ்லிம் லீக்கிலும் இணைந்தார். பின்னர் பாகிஸ்தான் பிரிவினைக்கான கோரிக்கையால் மோஹானி லீக் மற்றும் ஜின்னா இயக்கத்தில் இருந்து வெளியேறினார். 

அவர் பாகிஸ்தானை கடுமையாக எதிர்த்தார். பிரிவினைக்குப் பிறகு இந்தியாவில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மோஹானி மத நல்லிணக்கத்தில் தீவிர நம்பிக்கை கொண்டவர் ஆவார். பின்னர் அரசியல் நிர்ணய சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மோஹானி ஹஜ்ஜின் போது மக்காவிற்கும், கிருஷ்ணாஷ்டமிக்கு மதுரைக்கும் புனிதப் பயணம் மேற்கொண்டார்.

click me!