ஆறு பிராந்தியக் கட்சிகளின் கூட்டணியான சோரம் மக்கள் இயக்கம் 2018இல் அரசியல் கட்சியாக உருவானது. இதனால் மிசோரம் மாநிலத்தில் லால்துஹோமாவின் தலைமையில் ஆட்சி அமையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள மிசோரம் மாநிலத்தில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான லால்துஹோமாவின் கட்சியான சோரம் மக்கள் இயக்கம் (ZPM) ஆட்சியைப் பிடித்துள்ளது.
நவம்பர் 7ஆம் தேதி நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் மிசோரம் மாநிலத்தில் குறிப்பிடத்தக்க அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
மிசோரம் மக்கள் மாநாடு, சோரம் தேசியவாதக் கட்சி, சோரம் எக்ஸோடஸ் இயக்கம், சோரம் அதிகாரப் பரவலாக்கல் முன்னணி, சோரம் சீர்திருத்த முன்னணி மற்றும் மிசோரம் மக்கள் கட்சி ஆகிய ஆறு பிராந்தியக் கட்சிகளின் சோரம் மக்கள் இயக்கம் கூட்டணி ஆகும். இந்த கட்சிகள் பின்னர் ஒருங்கிணைந்த அமைப்பாக மாறினர். 2018 இல் அதிகாரப்பூர்வமாக சோரம் மக்கள் இயக்கம் (ZPM) உருவானது.
மழை நிற்க நள்ளிரவு வரை வெயிட் பண்ணுங்க... தமிழ்நாடு வெதர்மேன் கொடுக்கும் மிக்ஜம் அப்டேட்!
ஆரம்பத்தில், சோரம் மக்கள் இயக்கம் மிசோரம் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டது. அரசியலைத் தவிர்த்து சமூக அக்கறையுடன் செயல்படும் அமைப்பாக இயங்கி வந்தது.
பின்னர், ஜூலை 2019 இல் இந்திய தேர்தல் ஆணையத்தில் அதிகாரப்பூர்வமான கட்சியாக பதிவு செய்யப்பட்டது. ஆனால், அப்போதுதான் இயக்கத்தில் முக்கிய அங்கமாக இருந்த மிசோரம் மக்கள் மாநாட்டுக் கட்சி சோரம் மக்கள் இயக்கத்தில் இருந்து வெளியேறியது.
முதல் முதலாக 2018ஆம் ஆண்டில் மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில், சோரம் மக்கள் இயக்கம் போட்டியிட்டது. மிசோ தேசிய முன்னணி (MNF) மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு மாற்றாக உருவெடுத்தது. மதுவிலக்கை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வாதிடும் அக்கட்சி, 40 இடங்களில் 36 இடங்களில் போட்டியிட்டு 8 இடங்களில் வெற்றி பெற்றது. முதல் தேர்தலில் பெற்ற இந்த குறிப்பிடத்தக்க வெற்றி சோரம் மக்கள் இயக்கத்திற்கு உத்வேகத்தைக் கொடுத்தது.
2023 மிசோரம் சட்டமன்றத் தேர்தலில், சோரம் மக்கள் இயக்கம் மொத்தம் உள்ள 40 இடங்களிலும் போட்டியிட்டது. நவம்பர் 7ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் 80 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின. கருத்துக்கணிப்புகளில், சோரம் மக்கள் இயக்கம் 28 முதல் 35 இடங்களை வெல்லும் என்று கணிக்கப்பட்டது.
மிசோரம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், லால்துஹோமா தலைமையிலான சோரம் மக்கள் கட்சி 27 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஆட்சி அமைக்க 21 தொகுதிகள் போதுமான நிலையில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. ஆட்சியை இழக்கும் மிசோ தேசிய முன்னணி 10 இடங்களையும், பாஜக 2 இடங்களையும் பெற்றுள்ளன. காங்கிரஸ் ஒரு இடத்தைப் பெற்றுள்ளது.
பாஜக வெற்றிக்கு காங்கிரஸ்தான் காரணம்... இது காங்கிரஸின் தோல்வி: மம்தா பானர்ஜி காட்டம்