ஆந்திராவில் பரபரப்பு... ஜெகன் மோகன் ரெட்டிக்கு கத்திகுத்து!

Published : Oct 25, 2018, 02:01 PM ISTUpdated : Oct 25, 2018, 02:02 PM IST
ஆந்திராவில் பரபரப்பு... ஜெகன் மோகன் ரெட்டிக்கு கத்திகுத்து!

சுருக்கம்

ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் ஜெகன் மோகனை மர்ம நபர் கூர்கையாக தாக்கியுள்ளார்.

ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் ஜெகன் மோகனை மர்மநபர் ஒருவர் கூர்கையான கத்தியால் தாக்கியுள்ளார். மர்ம நபர் கத்தியால் குத்தியதில் ஜெகன் மோகன் இடது கையில் காயம் ஏற்பட்டு, ரத்தம் கசிந்துள்ளது. காயமடைந்த ஜெகன் மோகன் ரெட்டியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

 

விசாகப்பட்டினத்தில் இருந்து ஐதராபாத் நகருக்கு ஜெகன் மோகன் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் சிலருடன் செஃல்பி எடுத்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கத்தியால் குத்திய சீனிவாசன் என்பவரை பிடித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

வி.வி.ராஜேஷுக்கு லக்..! ஶ்ரீலேகாவுக்கு ஏமாற்றம்.. திருவனந்தபுரம் மேயர் ரேஸில் பாஜகவின் அதிரடி முடிவு
7 மணி ஆனா ஊரே ஆஃப் ஆயிடும்! தினமும் 2 மணி நேரம் டிஜிட்டல் விரதம் இருக்கும் வினோத கிராமம்!