முதல் முறையாக விமானத்தில் செல்லும் பிக்பாஸ் போட்டியாளர்... இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

Published : Mar 10, 2023, 05:50 PM IST
முதல் முறையாக விமானத்தில் செல்லும் பிக்பாஸ் போட்டியாளர்... இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

சுருக்கம்

பிரபல யூடியூபர் கங்கவ்வா முதல் முறையாக விமானத்தில் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

பிரபல யூடியூபர் கங்கவ்வா முதல் முறையாக விமானத்தில் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. யூடியூபை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு கங்கவ்வா என்ற பெயர் கண்டிப்பாக தெரிந்திருக்கும். தெலுங்கானாவைச் சேர்ந்த கங்கவ்வா eன்ற மூதாட்டி தனது கிராமத்து வாழ்க்கையைப் படம்பிடித்து அதனை வீடியோவாக அவரது மருமகனுடன் சேர்ந்து யூடியூபில் போடுவார். அதுமட்டுமின்றி, பிக் பாஸ் தெலுங்கு ரியாலிட்டி ஷோவின் 4வது சீசனிலும் அவர் பங்கேற்றார்.

இதையும் படிங்க: பெங்களூருவில் உள்ள பிரபல சி.டி.ஆர் ஹோட்டலுக்கு வந்த ஜே.பி நட்டா.. ஏன் தெரியுமா.?

இதனால் அவரது புகழ் அதிகரித்தது. தற்போது அவரது வீடியோ ஒன்று மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதில் கங்கவ்வா முதல் முறையாக விமானத்தில் செல்வதே அந்த வீடியோ. இந்த வீடியோவை கங்கவ்வா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த மாதம் பகிர்ந்துள்ளார். அது இதுவரை ஆறு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.அத்தோடு மட்டுமின்றி பல லைக்குகளையும் பெற்றுள்ளது. இந்த வீடியோவுக்கு இன்ஸ்டாகிராம் பயனர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: உலகின் மிக நீளமான ரயில்வே பிளாட்பார்ம்.. மார்ச் 12ல் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி !!

அந்த வகையில் ஒரு பயனர், உங்கள் மொழி எனக்கு புரியவில்லை, ஆனால் நீங்கள் சிறப்பாக செய்திருக்கிறீர்கள். என் அம்மாவை விமானத்தில் அழைத்துச் செல்லும் அந்த நாளுக்காக காத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மற்றொரு பயனர், எனக்கு தெலுங்கு புரியாது ஆனால் விமானத்தில் ஏறும் போது ஏற்படும் முதல் உணர்வுகளை என்னால் உணர முடிகிறது என்று தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
நவ்ஜோத் சித்துவின் மனைவி காங்கிரஸில் இருந்து அதிரடி நீக்கம்..! சர்ச்சை நாயகனின் தொடர் அட்ராசிட்டி!