
ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் உள்ள, ஒரு தனியார் மருத்துவமனையின் ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட 24 வயது பெண் ஒருவர், அந்த மருத்துவமனையில் நர்சிங் உதவியாளராக பணியாற்றி வந்த நபரால் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்பகுதியில் இந்த அதிர்ச்சி தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நுரையீரல் தொற்று காரணமாக அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம் பெண், கடந்த சில நாட்களாக ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சூழலில் குற்றம் சாட்டப்பட்ட சிராக் யாதவ் என்ற அந்த நபர், சம்பத்தன்று அதிகாலை 4 மணியளவில் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
தேர்தல் பத்திரத் திட்டம் - தவறான தீர்ப்பு!
பாதிக்கப்பட்ட அந்த பெண், தான் பிறருக்கு எச்சரிக்கையை எழுப்ப முயற்சித்தபோது குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை மயக்கமடையச் செய்ய ஒரு ஊசி போட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். அதன் பிறகு மயக்கமான அந்த பெண், அவரது கணவன் மொபைலில் அவரை அழைத்ததை அடுத்து சுயநினைவு பெற்றதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார். பின் தனக்கு நடந்த கொடுமையை தன் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.
"குற்றம் சாட்டப்பட்டவரை நாங்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறோம். அவர் அந்த பெண்ணின் படுக்கைக்கு அருகில் சென்று திரைச்சீலைகளை மூடுவது போன்ற சிசிடிவி காட்சிகளையும் நாங்கள் ஆய்வு செய்துள்ளோம்," என்று அவர்கள் கூறினார்கள்.
திருத்தப்பட்ட குடியுரிமை விதிகள் அடுத்த மாதம் முதல் அமல்.. வெளியான முக்கிய தகவல்..