நீ என்னை காதலிக்க மாட்டியா ? ரெண்டு பேரும் செத்துருவோமோ.. கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

Published : Dec 19, 2021, 08:36 AM IST
நீ என்னை காதலிக்க மாட்டியா ? ரெண்டு பேரும் செத்துருவோமோ.. கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

சுருக்கம்

காதலிக்க மறுத்த பெண்ணை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து, தானும் இறந்துவிட்ட இளைஞன். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் திக்கோடி பகுதியிலுள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் கிருஷ்ணபிரியா என்ற பெண் புதிதாக வேலைக்குச் சேர்ந்துள்ளார். இவரை அதே பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் என்ற இளைஞர் காதலித்து வந்துள்ளார்.

பின்னர் கிருஷ்ணபிரியாவிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி நந்தகுமார் கூறியுள்ளார். இதற்கு கிருஷ்ணபிரியா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நந்தகுமார் நேற்று முன்தினம் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வந்து, திடீரென கிருஷ்ணப் பிரியா மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீவைத்துள்ளார்.

இதைப்பார்த்து அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். அப்போது திடீரென நந்தகுமார் தன்னைதானே தீவைத்துக் கொண்டார். பின்னர் இருவரையும் மீட்ட அப்பகுதி மக்கள் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். காதலிக்க மறுத்த பெண்ணை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டு ,தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆரம்பம்! அதிகாரிகளை நியமிக்க மத்திய அரசு உத்தரவு!
மலை போல் குவிந்த எஸ்.ஐ.ஆர். வழக்குகள்.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!