காதலை முறித்த இளம் பெண்... ஆபாச வீடியோ புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட காதலன்!

 
Published : Mar 20, 2018, 11:33 AM ISTUpdated : Sep 19, 2018, 02:06 AM IST
காதலை முறித்த இளம் பெண்... ஆபாச வீடியோ புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட காதலன்!

சுருக்கம்

Young girl who broke the love

காதலனிடம் பேசாமல் புறக்கணித்த காதலியை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர  மாநிலத்தை சேர்ந்தவர் சரண்யா. இவர் சென்னையிலுள்ள தனியார் விடுதியில்  தங்கி, சோழிங்கநல்லூரில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிந்து  வருகிறார். இவர், தன்னுடன் பணிபுரியும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த  வெங்கட்ட சேஷய்யா சாத்திக், என்பவரை கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தார். இவர், சென்னை  முகலிவாக்கம் கிருஷ்ணவேணி நகர் 2வது சந்து தெருவில் வசித்து வந்தார்.  

இந்நிலையில்,  சாத்திக் நடவடிக்கை பிடிக்காததால் கடந்த சில மாதங்களுக்கு முன் லாவண்யா  அவருடன் பேசுவதை தவிர்த்து வந்தார். அவரது காதலர்  பலமுறை முயன்றும் லாவண்யா  பேசவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சாத்திக், லாவண்யாவுக்கு செல்போனில்  மிரட்டல் விட்டு வந்தார். அப்போதும், அவர் கண்டுகொள்ளவில்லை. இதனால், ஆத்திரமடைந்த சாத்திக் லாவண்யாவை பழிவாங்கும் நோக்கில், இருவரும் காதலித்தபோது பல்வேறு  இடங்களுக்கு சென்று எடுத்த புகைப்படத்தை ஆபாசமாக மாஃபிங் செய்து சித்தரித்து அவற்றை  பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்களில் வெளியிட்டுள்ளார்.

இதுபற்றி அறிந்த சரண்யா, காதலனிடம் கேட்டபோது, ‘‘ நான் சொல்வதைக் கேட்காவிட்டால் இன்னும் நிறைய புகைப்படங்களை  இதைவிட ஆபாசமாக சித்தரித்து ஆபாச வலைதளங்களில் வெளியிடுவேன்’’ என மிரட்டி  உள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த லாவண்யா இதுகுறித்து மாங்காடு காவல்  நிலையத்தில் புகார் அளித்தார்.  போலீசார் வழக்கு பதிந்து சாத்திக்கை  நேற்று கைது செய்தனர். அவரது அறையில் இருந்த கணினி மற்றும் செல்போன்  ஆகியவற்றையும் பறிமுதல் செய்துவிட்டு  சிறையில் அடைத்தனர்.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
"இந்தி படி.. இல்லன்னா டெல்லியை விட்டுப் போ!" பயிற்சியாளரை மிரட்டிய பாஜக பெண் கவுன்சிலர்!