‘மோடி குர்தா’ இனி யாருக்கு வேணும்?; கொண்டுவாங்க ‘யோகி குர்தா’…கடைகளில் அலைமோதும் உ.பி. இளைஞர்கள்

 
Published : Apr 03, 2017, 07:55 AM ISTUpdated : Sep 19, 2018, 03:06 AM IST
‘மோடி குர்தா’ இனி யாருக்கு வேணும்?; கொண்டுவாங்க ‘யோகி குர்தா’…கடைகளில் அலைமோதும் உ.பி. இளைஞர்கள்

சுருக்கம்

yogi gurdha

2014-ம் ஆண்டுதான்  மோடி அலை வீசியது, இப்போது யோகி அலை வீசுகிறது. அதான், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அலை வீசுகிறது.

2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா கட்சி வென்றவுடன் ஏற்பட்ட மோடி அலையால் மக்கள் ஈர்க்கப்பட்டு மோடி குர்தா, மோடி கோட், ஜாக்கெட் வாங்கி ஆர்வமாக அணிந்தனர்.

ஆனால், உத்தரப்பிரதேசத்தில் இப்போது முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் குர்தாமாடல்களை இளைஞர்களும், பெண்களும் கடைகளில் ஆர்வமாக வாங்கி அணிகின்றனர்.

உத்தரப்பிரதேசத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 15 ஆண்டுகளுக்கு பின் வெற்றி பெற்று பாரதிய ஜனதா கட்சிஆட்சியைப் பிடித்தது. கோரக்பூர் எம்.பி.யும், மாடாதிபதியும் ஆன யோகி ஆதித்ய நாத் முதல்வராகப் பொறுப்பு ஏற்றார்.

ஆதித்யநாத் முதல்வராக வந்ததில் இருந்து அவர் எடுத்த நடவடிக்கைகளும், சீர்திருத்த திட்டங்களும், உத்தரவுகளும் அந்த மாநில இளைஞர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக அரசு அலுவலர்கள் பான்மசாலா, குட்கா பணிநேரத்தில் மெல்லக்கூடாது, சரியான நேரத்துக்கு அலுவலகம் வர வேண்டும், மக்களின் குறைகளுக்கு சரியான விளக்கம் அளித்து தீர்க்க வேண்டும், பெண்களின் பாதுகாப்புக்கு ‘ஆன்ட்டி ரோமியோ’ படை, அலுவலகத்தை சுத்தமாக வைத்திருக்கும் முயற்சி, மக்கள் குறை கேட்பு முகாம் என வித்தியாசனமான திட்டங்களை தீட்டி மக்களின் ஆதரவைப் பெற்று வருகிறார்.

இதனால், முதல்வர் ஆதித்யநாத்தின் செயலால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள், கல்லூரி மாணவிகள் அவர் அணியும் காவி குர்தாக்களை விரும்பி அணிந்து வருகின்றனர். கடைகளில் சென்று முதல்வர் யோகியின் குர்தாக்களைப் போல் வேண்டும் என்று கல்லூரி மாணவர்களும்,  மாணவிகளும் கேட்டு வாங்குகிறார்கள். இதனால், யோகிகுர்தாவுக்கு பயங்கரமான ‘டிமான்ட்‘ ஏற்பட்டுள்ளது.

அதேயமம், மோடி ஜாக்கெட், மோடி குர்தாக்களை இப்போது அந்த மாநில மக்கள் விரும்பி கேட்பதில்லை.

பரா மாவட்டத்தில் உள்ள தீனதயால் தாம் அமைப்பின் தலைவர் பதம்ஜிகூறுகையில், “ இப்போது, காவி நிறத்தில் இருக்கும் யோகி குர்தா தான் இளைஞர்கள் மத்தியில் பிரபலம்.  எங்கள் அமைப்பில் பணியாற்றும் பெண்களும், இளைஞர்களும் யோகி குர்தாவை விரும்பி தைத்து அணிந்து வருகிறார்கள். இதற்கு முன் மோடிகுர்தா தான் மக்களின் விருப்பமாக இருந்தது. இப்போது யோகி குர்தா தான் மக்களை ஈர்த்துள்ளது’’ என்றார்.

இந்து யுவ வாகினி அமைப்பின் நிர்வாகி ஸ்ரீவஸ்தவா கூறுகையில், “ இந்து யுவவாகினி அமைப்பின் பெண்கள், ஆண்கள் அனைவரும் யோகி ஆதித்யநாத் அணியும் குர்தாக்கள் போல் அணிய மிகவும் ஆசைப்படுகிறார்கள். இதற்காக டெய்லர்களைத்தேடி யோகியின் குர்தாக்கள் போல் தைக்க கூறிவருகிறார்கள்’’ என்றார்.

லக்னோவைச் சேர்ந்த ஒரு ரெடிமேட் கடை வைத்திருக்கும் ஒருவர் கூறுகையில், “ இதற்குமுன்பு கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் மோடிஜி அணியும்குர்தா, ஜிப்பா, கோட் வேண்டும் என்று கேட்பார்கள். இப்போது, யோகி ஆதித்யநாத்அணியும் காவி குர்தா போல் வேண்டும் கேட்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், அரசியல்வாதிகளும் யோகி அணியும் குர்தா போன்று கேட்கிறார்கள். இதனால், அதிகமான குர்தாக்களுக்கு ஆர்டர் கொடுத்து இருக்கிறோம். அனைத்து அளவுகளிலும் குர்தா கிடைக்க வேண்டும் என்பதற்காக பல இடங்களில் டெய்லரிடம்ஆர்டர் கொடுத்து இருக்கிறோம். அவர்களும், இரவு பகல் பாராமல் தைத்து வருகிறார்கள்’’ என்று தெரிவித்தார்.

 

 

 

PREV
click me!

Recommended Stories

திருப்பி அடிக்கும் பாஜக..! செம்ம அடி வாங்கிய கம்யூனிஸ்டுகள்.. கேரளாவில் ஆங்காங்கே பரபரப்பு
2026 விடுமுறை லிஸ்ட் ரெடி! 2026-ல் எந்த நாள் விடுமுறை? முழு பட்டியல் இதோ!