பெற்ற தாயுடன் தகாத உறவில் ஈடுபட்ட கல்லூரி மாணவன்…. கோடாரியால் போட்டுத் தள்ளிய தந்தை!!

 
Published : Apr 26, 2018, 08:34 AM ISTUpdated : Sep 19, 2018, 02:17 AM IST
பெற்ற தாயுடன் தகாத உறவில் ஈடுபட்ட கல்லூரி மாணவன்…. கோடாரியால் போட்டுத் தள்ளிய தந்தை!!

சுருக்கம்

wrong relationship with mother son killed by father

கர்நாடகாவில் பெற்ற தாயுடன் தகாத உறவு கொண்ட கல்லூரி மாணவனை அவரது தந்தையே கோடாரியால் வெட்டிக் கொன்றார். தலைமறைவான தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி தாலுகா கோலிவாடா கிராமத்தை சேர்ந்தவர் மல்லப்பா இர்காரு. விவசாயியான  இவருடைய மகன் சரணப்பா அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு டிகிரி படித்து வந்தார். சரணப்பாவுக்கும் அவரது தாய்க்கும்  இடையே தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை  மல்லப்பா தனது விவசாய நிலத்துக்கு சென்று விட்டார். அப்போது சரணப்பாவும், அவரது தாயும்  உடலுறவில் ஈடுபட்டனர். திடீரென அங்கு வந்த மல்லப்பா தனது மனைவியும், மகனும் தகாத உறவில் ஈடுபட்டதை நேரில் பார்த்ததால் அதிர்ச்சி அடைந்தார்.

இது தொடர்பாக தந்தைக்கும் மகனுக்கும் அங்கு தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மல்லப்பா, வீட்டில் இருந்த கோடரியை எடுத்து சரணப்பாவை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த சரணப்பா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதையடுத்து மல்லப்பா அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகி விட்டார்.

இதுகுறித்து அறிந்த உப்பள்ளி புறநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட சரணப்பாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், தனது மனைவியுடன் பெற்ற மகனே தகாத உறவில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த மல்லப்பா அவரை கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து தலைமறைவாக உள்ள மல்லப்பாவை வலைவீசி தேடிவருகின்றனர். பெற்ற தாயுடன் மகன் தகாத உறவில் ஈடுபட்டதால், தந்தையே மகனை கோடரியால் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

டிரம்புடன் போனில் பேசிய பிரதமர் மோடி! வர்த்தக பேச்சுவார்த்தைக்கு மத்தியில் முக்கிய ஆலோசனை!
சத்தீஸ்கர் ரயில் விபத்துக்கு தகுதியற்ற ஓட்டுநர் தான் காரணம்.. விசாரணை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!