வாரணாசியில் வெற்றி பெற முடியுமா? மோடிக்கு மம்தா பானர்ஜி சவால்!

By Asianet TamilFirst Published Feb 3, 2019, 5:50 PM IST
Highlights

மேற்கு வங்காளத்தை நாங்கள் கவனித்துக் கொள்வோம். வெளியிலிருந்து வரும் பா.ஜ.க. தலைவர்கள் இதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். முதலில் வரும் தேர்தலில் வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிட்டால் வெற்றி கிடைக்குமா என்பதை மோடி நினைத்துப் பார்க்கட்டும்” எனக் காட்டமாகக் கருத்து தெரிவித்துள்ளார் மம்தா.

மேற்கு வங்காளத்தில் ஆளும் திரினாமூல் காங்கிரஸ் அரசை கடுமையாக தாக்கிய பேசிய பிரதமர் மோடிக்கு, உ.பி. வாரணாசி தொகுதியில் வெற்றி பெற முடியுமா என சவால் விட்டிருக்கிறார் மம்தா பானர்ஜி.

மேற்கு வங்காளம் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்த பிரதமர் நரேந்திர மோடி இரு இடங்களில் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பேசினார். இந்தப் பொதுக்கூட்டங்களில் மம்தா பானர்ஜியைத் தாக்கி பேசிய மோடி, “பாஜகவைப் பார்த்து மம்தா பானர்ஜி பயப்படுகிறார். ஜனநாயகத்தைக் காலில் போட்டு மம்தா மிதிக்கிறார். மேற்கு வங்காள மக்கள் இங்கு ஆட்சி மாற்றத்தை எதிர்பார்ப்பதாக”  குறிப்பிட்டார். 

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு மம்தா பானர்ஜி பதிலடி கொடுத்திருக்கிறார். ”மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க.வுக்கென தலைவர்களே இல்லை. வெளி மாநிலங்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்து மேற்கு வங்காளத்தில் அரசியல் செய்ய பா.ஜ.க.வினர்  நினைக்கிறார்கள். மேற்கு வங்காளத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று நினைப்பதற்கு முன்னர் முதலில் அவரவர் வேலையைப் பார்க்கட்டும். மோடி டெல்லியில் தனது வேலையை கவனித்துக் கொள்ளட்டும். யோகி ஆதித்யாநாத் உத்தரபிரதேச மாநிலத்தை கவனிக்கட்டும்.

click me!