பிரியங்கா பிரச்சாரத்துக்கு வரக்கூடாது... புருஷன பார்க்க ஜெயிலுக்குத்தான் போகணும்... ராகுலின் பிரம்மாஸ்திரத்தை பீஸ் பீஸாக்க துடிக்கும் பி.ஜே.பி..!

By Vishnu PriyaFirst Published Feb 3, 2019, 5:26 PM IST
Highlights

 பி.ஜே.பி.யின் ஐடியாவை தெளிவாய் ஸ்மெல் செய்துவிட்ட ராகுல், ஒருவேளை வதோரா கைதானால்...’அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் என் கணவரை கைது செய்துவிட்டது மோடியின் படை’ என்று பிரியங்காவை கண்ணீருடன் மீடியா முன் நிறுத்தும்  திட்டத்தில் இருக்கிறாராம். அனுதாப வாக்குகளை அள்ளிவிடும் திட்டமாம்.

’எங்க லேடியை பார்த்து நடுங்குகிறார் மோடி’- காங்கிரஸின்  செம்ம கெத்தான டிரெண்டிங் டயலாக் இதுதான். அரசியலுக்கு வந்திருக்கும் பிரியங்கா காந்திதான் அவர்கள் குறிப்பிடும் ‘லேடி’.

அண்ணன் ராகுலால் மோடியை வீழ்த்திடும் பிரம்மாஸ்திரமாக களமிறக்கப்பட்டுள்ளார் பிரியங்கா காந்தி. அரசியலுக்குள் வந்த ஜோரிலேயே காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளராக ஆக்கப்பட்டிருப்பதோடு, விறுவிறுவென பிரசார முன்னோட்டத்திலும் களமிறக்கி விடப்பட்டுள்ளார் பிரியங்கா. வட இந்தியாவினுள் வெளுத்துக் கட்டும் முன்பாக, பி.ஜே.பி. அநியாயத்துக்கு நொந்து கிடக்கும் தமிழகம், ஆந்திரம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் பிரியங்காவை பரபர பிரச்சாரத்தில் இறக்கிவிட ராகுல் திட்டமிட்டு இருக்கிறார். 

யாருமே எதிர்பாராத வகையில் பிரியங்காவுக்கு அமோகமான வரவேற்பு நிலை உருவாகியுள்ளது. சமூக வலைதளங்கள் மற்றும் மொபைல் பயன்பாடுகள் பிரியங்காவின் அரசியல் வருகையை ஒவ்வொரு இந்தியனின் வீட்டுக்குள் அட்லீஸ்ட் ஒரு நபரிடமாவது கொண்டு சென்றிருக்கின்றன. பிரியங்காவின் வருகைக்குப் பின் பி.ஜே.பி. ஒரு சைலண்ட் சர்வேவை எடுத்துப் பார்த்ததில், ராகுலால் மோடிக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை இது இன்னமும் மிக அதிகமாக மாற்றியிருப்பது உறுதியாகி இருக்கிறது. 

ஆக மோடிக்கு எதிராக விஸ்வரூபமெடுக்கும் பிரியங்கா அலையை அடித்து துவம்சம் செய்ய பி.ஜே.பி.யின் தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் அதிமேலட்ட கூட்டம் ஒன்று அமர்ந்து யோசித்ததில்...தானாக வந்து சிக்கியிருக்கிறார் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதோரா. ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் 18 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் வாங்கிய விவகாரத்தில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக அவர் மற்றும அவரது நண்பர் மனோஜ் அரோரா மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவாகியுள்ளது. 

இந்த வழக்கில் வதோரா எந்த சூழலிலும் கைதாகலாம் எனும் நிலை மேலெழுந்துள்ளது. இதனால் டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து வரும் 16-ம் ம் தேதி வரை கைதுக்கு தடை வாங்கியுள்ளார். அதேநேரத்தில் வரும் 6-ம் தேதியன்று கண்டிப்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பாக அவர் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் நிச்சயம் ஆஜராவார் என்று அவரது வழக்கறிஞர் துள்சி கூறியுள்ளார். 

இந்த சூழலைத்தான் முழுமையாக தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பி.ஜே.பி. செமத்தியாக திட்டமிட்டுள்ளது. வதோரா ஆஜராகும் காட்சிகளை விஸ்வரூபப்படுத்தி, ‘மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரியங்காவின் கணவர்! சோனியா மருமகனின் பித்தலாட்டங்கள்! வெளிநாட்டையும் விடாமல் சொத்துக் குவிக்கும் ராபர்ட் - ராகுல் கூட்டணி’ என்று  தனக்கு சாதகமான மீடியாக்கள் மூலமாக கிழி கிழியென கிழிக்கும் முடிவில் இருக்கிறது பி.ஜே.பி. 

அதேபோல் கைதுக்கு தடை உத்தரவு காலாவதியான உடனேயோ அல்லது இன்னும் ஒரு சில வாரங்களிலோ இந்த வழக்கை பயன்படுத்தி வதோராவை திகார் ஜெயிலுக்கு பார்சல் செய்யும் ஐடியாவில் இருக்கிறார்கள். தேர்தல் பிரசாரம் பீக்கில் இருக்கும் போது பிரியங்கா களத்திற்கு வராமல் தன் கணவர் வதோராவின் ஜாமீனுக்காக கோர்ட்டுக்கும், ஜெயிலுக்ம்கும் அலைய வேண்டும் என்பதே டெல்லி லாபியின் நோக்கமாம். 

பிரியங்கா கணவரின் இந்த சீட்டிங் முகத்தை திரைகிழித்துக் காட்டி, ‘நாட்டுக்கு வருமான இழப்பை உருவாக்கிய இந்த குடும்பத்துக்கா உங்கள் ஓட்டு? பிரியங்கா பிரதமரானால் நாட்டை ஆளப்போவது ராபர்ட் எனும் குற்றவாளிதான்!’ என்றெல்லாம் சொல்லி காங்கிரஸை கதறவிட திட்டமிட்டுள்ளனர். பி.ஜே.பி.யின் ஐடியாவை தெளிவாய் ஸ்மெல் செய்துவிட்ட ராகுல், ஒருவேளை வதோரா கைதானால்...’அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் என் கணவரை கைது செய்துவிட்டது மோடியின் படை’ என்று பிரியங்காவை கண்ணீருடன் மீடியா முன் நிறுத்தும்  திட்டத்தில் இருக்கிறாராம். அனுதாப வாக்குகளை அள்ளிவிடும் திட்டமாம். 

ஆக மொத்தத்தில் இன்னும் சில நாட்களில் மோடி படை மற்றும் ராகுல் படைக்கு இடையில் ஆக்‌ஷன் பிளாக்குகள் மட்டுமில்லாமல் சென்டிமெண்ட் சண்டைகளும் பட்டையை கிளப்பும் போல் தெரிகிறது. நமக்கு நல்ல எண்டர்டெயின்மெண்ட் காத்திருக்குது!

click me!