ரயில் தடம் புரண்டு விபத்து... 7 பேர் உயிரிழப்பு!

By vinoth kumarFirst Published Feb 3, 2019, 10:35 AM IST
Highlights

பீகாரில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பீகாரில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

பீகாரின் ஜோக்பானி என்ற இடத்தில் இருந்து டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் வரை சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் என்ற ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இன்று அதிகாலை 4 மணியளவில் வைஷாலி அருகே உள்ள ஷகாதை பஸர்க் என்ற இடத்தில் சென்றுக்கொண்டிருந்த போது ரயிலின் 9 பெட்டிகள் பலத்த சத்தத்துடன் தடம் புரண்டன. 

இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாகவும், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவகிறது. கவிழ்ந்து கிடக்கும் பெட்டிகளுக்குள் சிலர் இன்னும் சிக்கி இருக்கலாம், ஆகையால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

இதற்கிடையே ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்து, நிவாரணம் அறிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சமும்,  படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்பட உள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் ரயில் தடம் புரண்ட பகுதியில் உடனடி நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்வர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

click me!