இடைக்கால பட்ஜெட் சும்மா கொஞ்சம் தான்...! முழு பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு இருக்கு..! மோடி அதிரடி..!

By ezhil mozhiFirst Published Feb 2, 2019, 3:47 PM IST
Highlights

மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி, இந்து பாஜக தேர்தல் பிரச்சாரத்தை  தொடக்கி வைத்து பேசினார். அப்போது, முழு பட்ஜெட் தாக்கல் செய்யும் போது சிறந்த திட்டங்கள் உள்ளது என தெரிவித்து உள்ளார்.

இடைக்கால பட்ஜெட் சும்மா கொஞ்சம் தான்...! 

மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி, இன்று பாஜக தேர்தல் பிரச்சாரத்தை தொடக்கி வைத்து பேசினார். அப்போது, முழு பட்ஜெட் தாக்கல் செய்யும் போது சிறந்த திட்டங்கள் உள்ளது என தெரிவித்து உள்ளார்.

மத்தியில் ஆளும் பாஜக அரசு நேற்று, 2019 - 2020 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ததது. அதில் மக்களுக்கு பயப்பெறும் வகையில் வரி சலுகை, விவசாய பெருமக்களுக்கு சலுகை என அறிவித்து, மேலும் பல நல்ல திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதாக  தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் இடைக்கால பட்ஜெட்டில் ஒரு சில திட்டங்கள் மற்றும் சலுகை மட்டுமே அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் தேர்தலுக்கு பின் வரும், இந்த ஆண்டுக்கான முழு பட்ஜெட்டில் மாபெரும் திட்டங்கள்  அறிவிக்கப்படும் என்றும், அந்த  திட்டங்களை இளைஞர்கள் மற்றும்  விவசாய பெருமக்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும் என பிரதமர்  நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார். 


.
மேலும் நேற்று அறிவித்து இருந்த மிக சிறந்த திட்டமான, ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை அளிப்பது, வருமான வரி உச்சவரம்பை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தியது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு மக்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். பிரதமர்  நரேந்திர மோடியின் பிரச்சார உரை இன்றே சூடு பிடித்துள்ளது
 

click me!