
PM Modi on World Environment Day 2025: Call to Action for a Greener Planet : ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினம் இன்று ஆகும். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி டெல்லி உள்ள மகாவீர் ஜெயந்தி பூங்காவில் ஒரு மரக்கன்று நட்டார். பிறகு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த மோடி, 'பூமியை பாதுகாப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்துமாறு' வலியுறுத்தினார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், " இந்த உலக சுற்றுச்சூழல் தினத்தில் நாம் நம்முடைய பூமியை பாதுகாப்பதற்கும், நம் எதிர்களும் சவால்களை சமாளிப்பதற்கும் நமது முயற்சிகளை ஆழப்படுத்த வேண்டும்.நம்முடைய சுற்றுச்சூழல் பசுமையாகவும், சிறப்பாகவும் மாற அடிமட்டத்தில் பாடுபடும் அனைவரையும் நான் மனதார பாராட்டுகிறேன" என்று பதிவிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, 'ஏக் பெட் மா கே நாம் பர் 2.0' முயற்சியின்படி இந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் 5 முதல் செப்டம்பர் 30 வரை இந்தியா முழுவதும் மரக்கன்றுகளை நடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. கடந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தன்று ஒரு அரச மரத்தை டெல்லியில் உள்ள புத்தக ஜெயந்தி பூங்காவில் 'ஏக் பெட் மா கே நாம்' பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏக் பெட் மா கே நாம் என்றால் என்ன?
ஏக் பெட் மா கே நாம் என்பது ஒரு குறியீட்டு செயலாகும். அதாவது மரங்கள் உயிர் வாழ உதவுதல், வாழ்க்கையை வளர்ப்பதிலும், பூமியின் ஆரோக்கியத்திற்கு பங்களிப்பதிலும், தாய்மார்களின் பங்கை மதிக்கின்றது. மேலும் ஒரு தாயே போலவே அவை அடுத்த தலைமுறைக்கு வாழ்வாதாரம் பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்தை வழங்குகின்றது. பூமியை மேம்படுத்துவதற்கு அனைவரும் இந்த தினத்தில் பங்களிக்க வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா தனது வனப்பகுதியை அதிகரிக்க வழி வகுத்து பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
" கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் வனப்பகுதி அதிகரிக்க வழிவகுத்த ஏராளமான கூட்டு முயற்சிகள் உங்கள் அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்யும் நிலையான வளர்ச்சியை நோக்கிய நமது தேடலுக்கு இது ரொம்பவே நல்லது. இதற்கு பங்களித்த அனைவருக்கும் பாராட்டுக்கள்" என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்