பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் குறையும்…உலக வங்கி கணிப்பு…

First Published Jan 12, 2017, 12:57 PM IST
Highlights

ண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் குறையும்…உலக வங்கி கணிப்பு…

2017-ம் ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சி 2.7 சதவீதமாக இருக்கும்  என்றும்  ரூபாய் நோட்டுகள் வாபஸ் நடவடிக்கையால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறையும் என்றும் உலக வங்கி கணித்துள்ளது.

2017-ம் ஆண்டில் உலக அளவில் பொருளாதார வளர்ச்சி குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், வர்த்தக தேக்கம், அடக்கமான முதலீடுகள் மற்றும் உச்சபட்ச கொள்கை, நிச்சயமற்ற தன்மை போன்ற காரணங்களால், இந்த ஆண்டு உலக பொருளாதாரத்துக்கு கடினமான ஆண்டாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பல ஆண்டு ஏமாற்றத்துக்குப்பின், இந்த ஆண்டு உறுதியான பொருளாதார வாய்ப்புகள் தென்படுவதாகவும், இதனால், உலகப் பொருளாதாரம் 2.3 சதவீதத்தில் இருந்து 2.7 சதவீதமாக அதிகரிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது. 

ஆனால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகம், உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் வாபஸ் நடவடிக்கையால் குறையும் என உலக வங்கி கணித்துள்ளது.

2016-17-ம் நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறையும் எனவும், எனினும் இது, வருகிற ஆண்டுகளில் 7.8 சதவீதம் வரை உயரக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

click me!