'Flying kiss' கொடுத்த ராகுல் காந்தி: பாஜக பெண் எம்.பி.க்கள் புகார்!

Published : Aug 09, 2023, 02:43 PM IST
'Flying kiss' கொடுத்த ராகுல் காந்தி: பாஜக பெண் எம்.பி.க்கள் புகார்!

சுருக்கம்

நாடாளுமன்றத்தில் பேசி முடித்து விட்டு, கிளம்பும் முன் 'Flying kiss' கொடுத்த ராகுல் காந்தி மீது பாஜக பெண் எம்.பி.க்கள் புகார் அளித்துள்ளனர்

மத்திய பாஜக அரசுக்கு எதிராக நாடாளுமன்ற மக்களவையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் மீதான விவாதம் நேற்றும், இன்றும் நடைபெறுகிறது. நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீதான விவாதத்தில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று பேசினார். அப்போது பேசிய அவர். மணிப்பூர் விவகாரத்தில் பாஜக அரசை கடுமையான விமர்சித்து பேசினார்.

“பிரதமர் மோடி மணிப்பூரை இந்தியாவின் ஒரு பகுதியாக கருதவில்லை. மணிப்பூரை பிரதமர் மோடி இரண்டாக பிரித்துள்ளார். இந்தியா நமது மக்களின் குரல். மணிப்பூரில் அந்தக் குரலைக் கொன்றீர்கள். மணிப்பூரில் பாரத மாதாவை கொன்றீர்கள். நீங்கள் மணிப்பூர் மக்களை கொன்றீர்கள். இந்தியாவை கொன்றீர்கள். நீங்கள் துரோகிகள். நீங்கள் தேசபக்தர்கள் இல்லை.” என ராகுல் காந்தி ஆவேசமாக பேசினார்.

இந்தியாவை கொன்றீர்கள் என்ற ராகுல் காந்தியின் பேச்சுக்கு பாஜக எம்.பி.க்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். ராஜஸ்தான், மேற்குவங்கம் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சுட்டிக்காட்டி மத்திய பாஜக அமைச்சர் ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்தார். 1984 சீக்கிய வன்முறை குறித்தும் காங்கிரஸை அவர் விமர்சித்து பேசினார்.

முன்னதாக, நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய ராகுல் காந்தி, தனது பேச்சை முடித்துக் கொண்டதும், ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெறவுள்ள பேரணியில் கலந்து கொள்வதற்காக உடனடியாக அவையை விட்டு கிளம்பினார். அப்போது, அவர் அவை உறுப்பினர்களுக்கு 'Flying kiss' கொடுத்து விட்டு சென்றார்.

என் ஒரு தாய் இங்கிருக்கிறார்; இன்னொரு தாயை மணிப்பூரில் கொன்று விட்டீர்கள் - ராகுல் காந்தி தாக்கு!

அவரது இந்த நடவடிக்கைக்கு பாஜகவினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ராகுலை தொடர்ந்து பேசிய ஸ்மிருதி இராணி, “நான் ஒன்றை ஆட்சேபிக்கிறேன். எனக்கு முன் பேச வாய்ப்பளித்தவர் வெளியேறும் முன் அநாகரீகமாக நடந்து கொண்டார். பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமரும் பாராளுமன்றத்தில் பறக்கும் முத்தம் கொடுக்க ஒரு பெண் வெறுப்பு கொண்ட ஆணால் மட்டுமே முடியும். இதுபோன்ற கண்ணியமற்ற நடத்தையை நாடாளுமன்றத்தில் இதற்கு முன் நான் பார்த்ததில்லை. பெண்களைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்பதை அவரது நடத்தை காட்டுகிறது.” என ராகுல் காந்தியை விமர்சித்தார்.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பேசி முடித்து விட்டு, கிளம்பும் முன் 'Flying kiss' கொடுத்த ராகுல் காந்தி மீது பாஜக பெண் எம்.பி.க்கள் புகார் அளித்துள்ளனர். ராகுல் காந்தி மீது "தகாத" நடத்தைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி தனக்கு flying kiss கொடுத்தார் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியும் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக, பாஜக பெண் எம்.பி.க்கள் கடிதத்தில் கையெழுத்திட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், ராகுல்காந்தி அவையில் இருந்து வெளியேறியதை விமர்சிக்கும் வகையில், அவர்கள் ஓடிவிட்டார்கள், நாங்கள் ஓடவில்லை எனவும் ஸ்மிருதி இராணி சாடினார். “மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பலமுறை கூறினர். ஆனால், எதிர்க்கட்சிகள் ஓடிவிட்டன, நாங்கள் ஓடவில்லை.” என அவர் தெரிவித்தார்.

இதனிடையே, ராகுல் காந்தியின் நாடாளுமன்ற பேச்சு வெறும் 4 நிமிடங்கள் மட்டுமே காட்டப்பட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. “மணிப்பூர் விவகாரம் குறித்து ராகுல் காந்தி 15 நிமிடம் 42 வினாடிகள் பேசினார். இதன்போது, அரசு தொலைக்காட்சியான sansad_tv-யில் சபாநாயகர் ஓம் பிர்லாவை 11 நிமிடம் 08 வினாடிகள் காட்டப்பட்டார். ஆனால், ராகுல் காந்தி வெறும் 4 நிமிடங்களே காட்டப்பட்டார்.” என்றும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

LPG Cylinder: கேஸ் சிலிண்டர் புக் பண்ணியும் டெலிவரி வரலையா? டீலர் அதிக காசு கேட்கிறாரா? இத பண்ணுங்க போதும்!
12 நாட்களில் 7 புண்ணியத் தலங்கள்! IRCTC வழங்கும் மெகா ஜியோதிர்லிங்க யாத்திரை